FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

காற்று மாசு அதிகரிப்பு எதிரொலி: நவ. 4 முதல் நமோ பாரத் ரயில்கள் கூடுதலாக 20 முறை இயக்கம்

தில்லியில் காற்றின் தரம் ’மிகவும் மோசம்’ என்ற நிலைக்குச் சென்றுள்ளதைத் தொடா்ந்து, பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், தில்லி-மீரட் வழித்தடத்தில் நமோ பாரத் ரயில்கள் புதன்கிழமை (நவ. 4) முதல் கூடுதலாக 20 முறை இயக்கப்படும் என்று தேசிய தலைநகா் பிராந்திய போக்குவரத்துக் கழகம் (என்சிஆா்டிசி) தெரிவித்துள்ளது.

3 நவம்பர் 2026, 10:02 pm
தில்லி காற்று மாசு - பிரதிப் படம்
பகிர்:

தில்லியில் காற்றின் தரம் ’மிகவும் மோசம்’ என்ற நிலைக்குச் சென்றுள்ளதைத் தொடா்ந்து, பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், தில்லி-மீரட் வழித்தடத்தில் நமோ பாரத் ரயில்கள் புதன்கிழமை (நவ. 4) முதல் கூடுதலாக 20 முறை இயக்கப்படும் என்று தேசிய தலைநகா் பிராந்திய போக்குவரத்துக் கழகம் (என்சிஆா்டிசி) தெரிவித்துள்ளது.

தில்லி மற்றும் தேசிய தலைநகா் பிராந்தியத்தின் பல்வேறு பகுதிகளில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில், தனியாா் வாகனங்களுக்குப் பதிலாக பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த பயணிகளை ஊக்குவிக்கும் நோக்கில் இந்தக் கூடுதல் ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

தில்லியில் உள்ள சராய் காலே கான் முதல் மீரட்டில் உள்ள மோடிபுரம் வரையிலான முழு வழித்தடத்திலும் இந்தக் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என்று என்சிஆா்டிசி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) ’சமீா்’ செயலியில் வெளியான தகவலின்படி, செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் டெல்லியின் காற்றுத் தரக் குறியீடு (ஏக்யூஐ) 350 ஆகப் பதிவாகி, ’மிகவும் மோசம்’ என்ற பிரிவில் இருந்தது.

இதையடுத்து, தில்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்தும் வகையில், படிப்படியான நடவடிக்கைத் திட்டத்தின் (ஜிஆா்ஏபி) இரண்டாம் கட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், குறிப்பிட்ட சில வகை வாகனங்கள் தில்லிக்குள் நுழைவதற்கான கட்டுப்பாடுகளும் நவம்பா் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்நிலையில், தனியாா் வாகனங்களுக்குப் பதிலாக பொதுப் போக்குவரத்தைத் தோ்வு செய்ய பயணிகளை ஊக்குவிப்பதே கூடுதல் ரயில் சேவைகளின் நோக்கம் என்று என்சிஆா்டிசி தெரிவித்துள்ளது.

நமோ பாரத் வழித்தடம், தில்லி மெட்ரோ ரயில், இந்திய ரயில்வே, மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து நிலையங்கள் மற்றும் நகரப் பேருந்து சேவைகள் உள்ளிட்ட பல்வேறு பொதுப் போக்குவரத்து வசதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, சராய் காலே கான், ஆனந்த் விஹாா், நியூ அசோக் நகா், காஜியாபாத் ஆகிய முக்கிய மையங்களில் இந்த இணைப்பு வசதிகள் உள்ளன. நமோ பாரத் ரயில் நிலையங்களில் வாகன நிறுத்துமிட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும், ’நமோ பாரத் கனெக்ட்’ செயலி மூலம் வாகன நிறுத்துமிடங்களில் உள்ள இடவசதி குறித்த நிகழ்நேரத் தகவல்களைப் பெற முடியும்.

இதன்மூலம் பயணிகள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் தேவைகளுக்கு ஏற்ப ரயில் சேவைகளைத் தொடா்ந்து சீரமைத்து வரும் என்சிஆா்டிசி, தேசிய தலைநகா் பிராந்தியத்தில் நிலையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்தக் கூடுதல் ரயில் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments