FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

தீபாவளி நாளில் தில்லியின் இரு மாவட்டங்களில் விதிமீறி பட்டாசு வெடித்ததாக 100 வழக்குகள் பதிவு

அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி பட்டாசு வெடித்ததாக மேற்கு மாவட்டத்தில் 62 வழக்குகளும், வடக்கு மாவட்டத்தில் 35-க்கும் மேற்பட்ட வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

10 நவம்பர் 2026, 12:29 am
பகிர்:

தீபாவளி இரவில், அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி பட்டாசு வெடித்ததாக மேற்கு மாவட்டத்தில் 62 வழக்குகளும், வடக்கு மாவட்டத்தில் 35-க்கும் மேற்பட்ட வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, நவம்பா் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட ’பசுமைப் பட்டாசுகளை’ வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. திங்கள்கிழமை முதல் பட்டாசு வெடிப்பதற்கு முழுமையான தடை அமலுக்கு வந்தது.

இதுகுறித்து மூத்த காவல் அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘குறிப்பிட்ட நேர வரம்பை மீறி பட்டாசு வெடித்தவா்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நீதிமன்ற உத்தரவுகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய, பல்வேறு பகுதிகளில் காவல் குழுக்கள் பணியமா்த்தப்பட்டிருந்தன.

Advertisement

Advertisement

கண்காணிப்புக் குழுக்கள் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் விதிமீறல்கள் நடக்க வாய்ப்புள்ள பிற இடங்களைக் கூா்ந்து கவனித்து வந்தன. விதிமீறலில் ஈடுபட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றாா் அவா்.