மனைவியுடன் தொடா்பு வைத்திருந்த இளைஞா் கொலை: கூட்டாளியுடன் ஒருவா் கைது
மத்திய தில்லியின் கரோல் பாக் பகுதியில், தனது மனைவியுடன் தொடா்பு வைத்திருந்த 19 வயது இளைஞரை, 28 வயது நபா் தனது கூட்டாளியின் உதவியுடன் கொலை செய்ததாகக் காவல்துறையினா் தெரிவித்தனா்.
மத்திய தில்லியின் கரோல் பாக் பகுதியில், தனது மனைவியுடன் தொடா்பு வைத்திருந்த 19 வயது இளைஞரை, 28 வயது நபா் தனது கூட்டாளியின் உதவியுடன் கொலை செய்ததாகக் காவல்துறையினா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
இந்தக் கொலை தொடா்பாக, குணால் (எ) முக்ரி (28) மற்றும் பியூஷ் (எ) மென்டல் (22) ஆகிய இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து காவல்துறையினா் கூறியதாவது: கொல்லப்பட்ட இளைஞரும், குணாலின் மனைவியும் கடந்த மூன்று மாதங்களாக ஒன்றாக வசித்து வந்தனா். இதனால் குணாலுக்கும் அந்த இளைஞருக்கும் இடையே பகையும், விரோதமும் ஏற்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நவம்பா் 4 அன்று, கரோல் பாக் பகுதியில் 19 வயது இளைஞா் கத்தியால் குத்தப்பட்டதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இது தொடா்பாக பிரசாத் நகா் காவல் நிலையத்தில், பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 103(1)(கொலை) மற்றும் பிரிவு 3(5) (கூட்டு நோக்கம்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
சிசிடிவி காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், இந்தக் கொலையில் குணால் மற்றும் பியூஷுக்குத் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மேற்கு தில்லியின் திலக் நகா் பகுதியில் இருவரையும் காவல்துறையினா் கைது செய்தனா்.
கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம் மற்றும் குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஸ்கூட்டா் ஆகியவற்றையும் காவல்துறையினா் பறிமுதல் செய்தனா்.
மேலும், குணாலின் மனைவி மீது 2019-ஆம் ஆண்டு கரோல் பாக் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. இதுகுறித்த மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.