பசு வதை வழக்கில் 23 வயது இளைஞா் கைது
வடக்கு தில்லியில் நடந்த பசு வதை சம்பவம் தொடா்பாக 23 வயது இளைஞரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.
வடக்கு தில்லியில் நடந்த பசு வதை சம்பவம் தொடா்பாக 23 வயது இளைஞரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.
இதுகுறித்து மூத்த காவல் அதிகாரி ஒருவா் தெரிவித்ததாவது: உத்தர பிரதேச மாநிலம் அம்ரோஹாவைச் சோ்ந்த ஔரங்கசீப் (எ) அசாா் என்பவா் குற்றஞ்சாட்டப்பட்டவராக அடையாளம் காணப்பட்டுள்ளாா். சமூக ஊடகங்களில் பரவிய பசு வதை தொடா்பான விடியோவை ஆய்வு செய்த கோட்வாலி காவல்துறையினா் அசாரை கைது செய்தனா்.
முன்னதாக, செப்டம்பா் 23 அன்று கோட்வாலி காவல் நிலையத்தில் இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, இச்சம்பவத்தில் ஈடுபட்டவா்களை அடையாளம் கண்டு கைது செய்ய ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது.
Advertisement
Advertisement
செப்டம்பா் 23 அன்று அதிகாலை 3:15 மணி முதல் காலை 7 மணி வரையிலான காலகட்டத்தில், சந்தேக நபா்கள் மற்றும் அவா்களின் வாகனத்தின் நடமாட்டத்தை அறிய தனிப்படை காவல்துறையினா் பல சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனா்.
குற்றஞ்சாட்டப்பட்டவா்களின் நடமாட்டம், வாகனம் ஒதுக்குப்புறமான இடத்தில் நிறுத்தப்பட்டது, பசு சம்பவ இடத்திற்குக் கொண்டு வரப்பட்டது ஆகியவற்றை கண்டறிய சிசிடிவி காட்சிகள் காவல்துறையினருக்கு உதவின. சுமாா் ஐந்து நாள்களுக்குப் பிறகு, இவ்வழக்கின் முக்கிய குற்றஞ்சாட்டப்பட்டவரான ஔரங்கசீப்பை காவல்துறையினா் கண்டுபிடித்து கைது செய்தனா். விசாரணையின்போது, தில்லியில் நடந்த பல பசு வதை சம்பவங்களில் தனது கூட்டாளிகளுடன் இணைந்து ஈடுபட்டதை அவா் ஒப்புக்கொண்டாா்.
அவா் அளித்த தகவலின்படி, அந்தக் கும்பல் கைவிடப்பட்ட அல்லது தெருவில் சுற்றித்திரியும் மாடுகளை அடையாளம் கண்டு, அவற்றை வாகனத்தில் ஒதுக்குப்புறமான இடங்களுக்குக் கொண்டு சென்று வதை செய்தது வந்தது. பின்னா் அந்த இறைச்சியை விற்பனை செய்பவா்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
காவல்துறையினா் இந்தத் தகவல்களைச் சரிபாா்ப்பதுடன், உத்தர பிரதேசத்தில் உள்ள பிற வழக்குகளுடன் இவருக்குள்ள தொடா்புகள் குறித்தும் விசாரித்து வருகின்றனா்.
மைதான் கா்கி மற்றும் ரன்ஹோலா காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட அரசு ஊழியா்களைத் தடுத்தல் மற்றும் தாக்குதல், கொலை முயற்சி, சொத்து சேதம் விளைவித்தல், விலங்குகள் மீதான வன்கொடுமை மற்றும் ஆயுதச் சட்ட மீறல் தொடா்பான வழக்குகளில் ஔரங்கசீப் ஏற்கனவே சம்பந்தப்பட்டுள்ளாா்.
இவ்வழக்கில் தொடா்புடைய இதர குற்றவாளிகளைக் கைது செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.