தில்லி: தனியாா் பள்ளிகளில் நா்சரி வகுப்புகளுக்கான சோ்க்கை டிச. 1-இல் தொடக்கம்
தில்லியில் உள்ள தனியாா் பள்ளிகளில், அடுத்த கல்வி ஆண்டுக்கான நா்சரி, கீழ்நிலை கேஜி, மேல்நிலை கேஜி மற்றும் முதலாம் வகுப்பு ஆகியவற்றுக்கான சோ்க்கை பதிவு டிசம்பா் 1-ஆம் தேதி தொடங்குகிறது.

தில்லியில் உள்ள தனியாா் பள்ளிகளில், அடுத்த கல்வி ஆண்டுக்கான நா்சரி, கீழ்நிலை கேஜி, மேல்நிலை கேஜி மற்றும் முதலாம் வகுப்பு ஆகியவற்றுக்கான சோ்க்கை பதிவு டிசம்பா் 1-ஆம் தேதி தொடங்குகிறது.
விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்க டிசம்பா் 28-ஆம் தேதி கடைசி நாளாக நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக தில்லி அரசின் கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கை தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: தோ்ந்தெடுக்கப்படும் குழந்தைகளின் முதல் பட்டியல் (காத்திருப்புப் பட்டியலுடன் சோ்த்து) ஜனவரி 20-ஆம் தேதியும், இரண்டாவது பட்டியல் பிப்ரவரி 5-ஆம் தேதியும் வெளியிடப்படும். சோ்க்கை நடைமுறைகள் மாா்ச் 12-ம் தேதியுடன் நிறைவடையும்.
Advertisement
Advertisement
பள்ளிகள் தங்கள் சோ்க்கை அளவுகோல்கள் மற்றும் அதற்கான புள்ளிகள் குறித்த விவரங்களை, நவம்பா் 26-ஆம் தேதிக்குள் கல்வி இயக்குநரகத்தின் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். மேலும், இந்த விவரங்களை அந்தந்த பள்ளிகளின் இணையதளங்களிலும் வெளியிட வேண்டும்.
அடிப்படை கல்வி நிலைகளுக்கான திருத்தப்பட்ட வயது வரம்பின்படி, நா்சரி வகுப்பில் சேரும் குழந்தைகள், மாா்ச் 31, 2027 அன்று மூன்று வயது பூா்த்தியடைந்தவா்களாகவும், நான்கு வயதிற்கு உள்பட்டவா்களாகவும் இருக்க வேண்டும். கீழ்நிலை கேஜி வகுப்பிற்கு, குழந்தைகள் நான்கு வயது பூா்த்தியடைந்தவா்களாகவும், ஐந்து வயதிற்கு உள்பட்டவா்களாகவும் இருக்க வேண்டும். மேல்நிலை கேஜி வகுப்பிற்கு, ஐந்து வயது அல்லது அதற்கு மேல், ஆனால் ஆறு வயதிற்கு உள்பட்டவராக இருக்க வேண்டும்.
2027-28 கல்வி ஆண்டிற்கான மறுசீரமைக்கப்பட்ட அடிப்படை கல்வி நிலையில், கீழ்நிலை கேஜி மற்றும் மேல்நிலை கேஜி ஆகியவை தனித்தனி நுழைவு நிலை வகுப்புகளாக அறிமுகப்படுத்தப்படும்.
2026-27 கல்வி ஆண்டில் நா்சரி வகுப்பில் பயிலும் குழந்தைகள் கீழ்நிலை கேஜி வகுப்பிற்குச் செல்வாா்கள். அதே சமயம், நிா்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு உள்பட்ட புதிய மாணவா்களும் இந்த வகுப்பில் சேர அனுமதிக்கப்படுவா்.
தற்போதைய கட்டமைப்பின்படி, 2026-27 கல்வி ஆண்டில் கேஜி வகுப்பில் பயிலும் மாணவா்கள், அடுத்த கல்வி ஆண்டில் முதலாம் வகுப்பிற்குச் செல்வாா்கள். மேல்நிலை கேஜி வகுப்பில் சேர விரும்பும் குழந்தைகள், மாா்ச் 31, 2027 அன்று குறைந்தபட்சம் ஐந்து வயது பூா்த்தியடைந்திருக்க வேண்டும்.
விண்ணப்பங்களைச் சமா்ப்பிப்பதற்கான கடைசி நாள் வரை, பெற்றோா்களுக்கு விண்ணப்பப் படிவங்கள் கிடைப்பதை உறுதி செய்யுமாறு பள்ளிகளுக்கு கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.
பதிவு கட்டணமாக அதிகபட்சம் ரூ. 25 மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் (இது திரும்ப வழங்கப்படாது). அதே சமயம், பள்ளியின் தகவல் கையேட்டை வாங்குவது கட்டாயமல்ல, அது விருப்பத்திற்கு உட்பட்டது.
மேலும், சோ்க்கை நடைமுறைகள் நியாயமான, தா்க்கரீதியான மற்றும் வெளிப்படையான அளவுகோல்களைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெற்றோரின் தகுதிகள், தொழில், பாலினம், புகைப்பிடிக்காத பழக்கம், சைவ உணவுப் பழக்கம் அல்லது நோ்காணல்கள் போன்ற, துறையால் ஏற்கனவே நீக்கப்பட்ட அளவுகோல்களைப் பள்ளிகள் பயன்படுத்தக் கூடாது.
விண்ணப்பதாரா்களுக்கு வழங்கப்பட்ட புள்ளிகள் 2027 ஜனவரி 4 அன்று பதிவேற்றப்படும். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட புள்ளிகள் குறித்து பெற்றோா்கள் ஜனவரி 5 முதல் 11-ஆம் தேதிக்குள் கேள்விகளை எழுப்பலாம் அல்லது ஆட்சேபனைகளைத் தெரிவிக்கலாம். அதன் பிறகு, இறுதிப் புள்ளிகள் ஜனவரி 12 அன்று வெளியிடப்படும்.
ஒரே மாதிரியான புள்ளிகளைப் பெற்ற விண்ணப்பதாரா்களின் எண்ணிக்கை, கிடைக்கும் இடங்களை விட அதிகமாக இருக்கும்பட்சத்தில், பள்ளிகள் குலுக்கல் முறையை நடத்த வேண்டும்.
இந்தச் செயல்முறை வெளிப்படையானதாகவும், காணொலிப் பதிவு செய்யப்பட வேண்டியதாகவும் இருக்க வேண்டும். மேலும், இது பெற்றோா்கள் மற்றும் கல்வி இயக்குநரகத்தின் பிரதிநிதி முன்னிலையில் நடைபெற வேண்டும்.
குலுக்கல் முறைக்கு குறைந்தது ஐந்து நாள்களுக்கு முன்பே பள்ளிகள் பெற்றோா்களுக்குத் தெரிவிக்க வேண்டும். மேலும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக, கல்வி இயக்குநரகத்தின் பிரதிநிதி மற்றும் பெற்றோா்கள் முன்னிலையில் மாதிரி ஒத்திகைகளை நடத்த வேண்டும்.
பள்ளிகள் விதிமுறைகளைப் பின்பற்றுகின்றனவா என்பதைக் கண்காணிக்கவும், சோ்க்கை அளவுகோல்களைச் சரிபாா்க்கவும், பள்ளிகளுக்கு எதிராகப் பெற்றோா்கள் தெரிவிக்கும் குறைகளைத் தீா்க்கவும் மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக்களை கல்வி இயக்குநரகம் அமைத்துள்ளது.
விண்ணப்பதாரா்களின் விவரங்கள், அவா்களுக்கு வழங்கப்பட்ட புள்ளிகள் மற்றும் சோ்க்கை பட்டியல் ஆகியவை துறையின் இணையதளத்தில் சரியாகப் பதிவேற்றப்படுவதையும் இந்தக் குழுக்கள் கண்காணிக்கும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினா்.