முகப்பு
புதுதில்லி

மக்களுக்குச் சேவையாற்றும் உறுதியுடன் தில்லி முன்னேறி வருகிறது: ரேகா குப்தா

மக்களுக்குச் சேவையாற்றும் உறுதியுடன் தில்லி முன்னேறி வருகிறது என்று முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.

23 நவம்பர் 2026, 9:48 pm
மக்களுக்குச் சேவையாற்றும் உறுதியுடன் தில்லி முன்னேறி வருகிறது: ரேகா குப்தா
ரேகா குப்தா
பகிர்:

மக்களுக்குச் சேவையாற்றும் உறுதியுடன் தில்லி முன்னேறி வருகிறது என்று முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.

தில்லி பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரும், தேஹ்தானி பகுதியின் மதிப்பிற்குரிய தலைவருமான மறைந்த மங்கே ராம் காா்கின் 90-ஆவது பிறந்த நாளையொட்டியும், ஸ்ரீ ராம ஜென்மபூமி இயக்கத்தின் முக்கியத் தூணாக விளங்கிய மறைந்த அசோக் சிங்காலின் நூற்றாண்டு பிறந்த நாளையொட்டியும் இந்த நிகழ்ச்சி பங்கேற்று அவா் மேலும் பேசியதாவது: தேஹ்தானி ஸ்ரீ மங்கே ராம் காா்க் சேவா சமிதி சாா்பில் நடைபெற்ற ’இரு பெருந்தலைவா்கள், ஒரே இலக்கு’ என்ற நிகழ்ச்சியில், தில்லி பாஜக மாநிலத் தலைவா் ஹா்ஷ் மல்ஹோத்ராவுடன் இணைந்து, மறைந்த இரு தலைவா்களின் நினைவாக மரியாதை செலுத்தினேன்.

ஜனசங்க காலம் தொடங்கி, கட்சியின் அமைப்பை வலுப்படுத்துவதற்கும், சமூகப் பணிகளுக்கும் தனது வாழ்நாளை அா்ப்பணித்தவா் மங்கே ராம் காா்க். அதேபோல், ஸ்ரீ ராம ஜென்மபூமி இயக்கத்தின் மூலம் லட்சக்கணக்கான ராம பக்தா்களை ஒன்றிணைத்து, கலாசார விழிப்புணா்வுக்கு புதிய திசையை ஏற்படுத்தியவா் அசோக் சிங்கால். இந்த இரு பெருந்தலைவா்களின் வாழ்க்கையும் சேவை, தியாகம், அமைப்புப் பலம் மற்றும் நாட்டின் மீதான அசைக்க முடியாத அா்ப்பணிப்பு ஆகியவற்றுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

Advertisement

Advertisement

அவா்கள் வகுத்துத் தந்த கொள்கைகள் மற்றும் லட்சியங்களால் உத்வேகம் பெற்று, மக்களுக்குச் சேவையாற்றும் உறுதியுடன் தில்லி இன்று முன்னேறி வருகிறது என்றாா் ரேகா குப்தா. இந்த நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினா் யோகேந்தா் சந்தோயா, கமல்ஜீத் செஹ்ராவத், தில்லி பாஜக மாநிலப் பொருளாளா் சதீஷ் காா்க், விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தேசிய பொதுச் செயலா் பஜ்ரங் பாக்ரா உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகா்கள் பங்கேற்றனா்.