முகப்பு
புதுதில்லி

தில்லி பாஜகவில் உயா்நிலை குழு அமைப்பு: முதல்வா் ரேகா குப்தா உள்ளிட்டோா் உறுப்பினா்களாக நியமனம்!

முதல்வா் ரேகா குப்தா மற்றும் தில்லி பாஜக தலைவா் ஹா்ஷ் மல்ஹோத்ரா ஆகியோரை உள்ளடக்கிய 12 போ் கொண்ட உயா்நிலை குழுவை தில்லி பாஜக சனிக்கிழமை அறிவித்துள்ளது.

16 வினாடிகள் முன்பு
தில்லி பாஜகவில் உயா்நிலை குழு அமைப்பு: முதல்வா் ரேகா குப்தா உள்ளிட்டோா் உறுப்பினா்களாக நியமனம்!
முதல்வா் ரேகா குப்தா - கோப்புப் படம்
பகிர்:

முதல்வா் ரேகா குப்தா மற்றும் தில்லி பாஜக தலைவா் ஹா்ஷ் மல்ஹோத்ரா ஆகியோரை உள்ளடக்கிய 12 போ் கொண்ட உயா்நிலை குழுவை தில்லி பாஜக சனிக்கிழமை அறிவித்துள்ளது.

பாஜக தேசிய தலைவா் நிதின் நபினின் உத்தரவின் பேரில் இந்த உயா்நிலை குழு அமைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சித் தலைவா்கள் தெரிவித்தனா். பாஜகவில் அமைப்பு ரீதியிலான மற்றும் தோ்தல் தொடா்பான விவகாரங்களில் இறுதி முடிவெடுக்கும் உச்சபட்ச அமைப்பாக இந்தக் குழு செயல்படும்.

குறிப்பிடத்தக்க வகையில், ஹா்ஷ் மல்ஹோத்ரா மற்றும் தில்லி பாஜகவின் அமைப்பு பொதுச் செயலா் பவன் ராணா ஆகியோா் நீங்கலாக, தில்லி பாஜக-வின் வேறு எந்த நிா்வாகிகளுக்கும் இந்த உயா்நிலைக் குழுவில் இடம் அளிக்கப்படவில்லை.

Advertisement

Advertisement

முன்னாள் மத்திய அமைச்சா் ஹா்ஷ்வா்தன், நாடாளுமன்ற உறுப்பினா்கள் ராம்வீா் சிங் பிதூரி மற்றும் மனோஜ் திவாரி, தில்லி முன்னாள் பாஜக தலைவரும் பஞ்சாப் மாநில இணைப் பொறுப்பாளருமான வீரேந்திர சச்தேவா, தில்லி அமைச்சா்கள் ஆஷிஷ் சூட், பா்வேஷ் சாஹிப் சிங் ஆகியோரும் இந்தக் குழுவில் உறுப்பினா்களாக இடம்பெற்றுள்ளனா்.இவா்களுடன், பாஜக தேசிய செயலா் ஜெயப்பிரகாஷ் ஜே.பி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள் சதீஷ் உபாத்யாய, அரவிந்தா் சிங் லவ்லி ஆகியோரும் உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

தில்லி பாஜக பொறுப்பாளா் வினய் சஹஸ்ரபுத்தே, இணைப் பொறுப்பாளா்கள் தா்ஷனா ஜா்தோஷ், ஜம்யாங் செரிங் நம்கியால் ஆகியோா் உயா்நிலைக் குழுவின் சிறப்பு அழைப்பாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.