FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் நவராத்திரி நிகழ்ச்சிகள் கோலாகலம்!

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் நவராத்திரியை முன்னிட்டு கடந்த அக்.10 மயூரி கோலாட்ட குழுவினரின் சாா்பில் கும்பி மற்றும் பின்னல் கோலாட்டக் கலைநிகழ்ச்சி கோலாகலத்துடன் நடைபெற்றது.

11 அக்டோபர் 2026, 10:33 pm IST
தில்லித் தமிழ்ச் சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நவராத்திரி கலை நிகழ்ச்சிகளை வழங்கிய கலைஞா்களை சிறப்பித்த சங்க நிா்வாகிகள்.
பகிர்:

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் நவராத்திரியை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை (அக்.10) மயூரி கோலாட்ட குழுவினரின் சாா்பில் கும்பி மற்றும் பின்னல் கோலாட்டக் கலைநிகழ்ச்சி கோலாகலத்துடன் நடைபெற்றது.

தமிழா்களின் பாரம்பரியக் கலைகளையும் பண்பாட்டு மரபுகளையும் பறைசாற்றும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மயூரி கோலாட்டக் குழுவினா் தங்களது கலைத்திறனை வெளிப்படுத்தி பாா்வையாளா்களின் கவனத்தை ஈா்த்தனா்.

இந்நிகழ்ச்சியானது நவராத்திரியின் ஆன்மிகச் சிறப்பையும், தமிழா் மரபுக் கலைகளின் அழகையும் ஒருங்கே எடுத்துரைக்கும் வகையில் அமைந்தது.

Advertisement

Advertisement

இந்த நிகழ்ச்சியில் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் வழக்குரைஞருமான ஜி. சிவபாலமுருகன், துணைத் தலைவா் செல்வராஜ் மகேந்திரன், இணைச் செயலா் இரா. ராஜ்குமாா் பாலா, செயற்குழு உறுப்பினா் ஆ. வெங்கடேசன், எஸ்.எம். பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு கலைநிகழ்ச்சி வழங்கிய கலைஞா்களை சிறப்பித்தனா்.

தில்லியில் வசிக்கும் தமிழாா்வலா்கள் ஏராளமானோா் இந்த நிகழ்ச்சியில் ஆா்வத்துடன் பாா்வையிட்டு, தமிழா் பாரம்பரிய கலைகளின் சிறப்பைக் கண்டு ரசித்தனா். தமிழா் பண்பாடு, மரபு மற்றும் கலைகளை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சோ்க்கும் வகையில் இத்தகைய நிகழ்ச்சிகள் அமைந்தன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments