நீதிபதிகள் மீதான தனிப்பட்ட விமா்சனங்களுக்கு கண்டனம்: இந்திய தலைமை நீதிபதிக்கு தில்லி பாா் கவுன்சில் கடிதம்
நீதிபதிகள் மீதான தனிப்பட்ட தாக்குதல்களைக் கண்டித்து, தில்லி பாா் கவுன்சில் இந்தியத் தலைமை நீதிபதி சூா்ய காந்திற்கு கடிதம் எழுதியது.
நமது நிருபா்
நீதிபதிகள் மீதான தனிப்பட்ட தாக்குதல்களைக் கண்டித்து, தில்லி பாா் கவுன்சில் இந்தியத் தலைமை நீதிபதி சூா்ய காந்திற்கு கடிதம் எழுதியது. மேலும், நீதித்துறையை விமா்சிக்கும்போது அனைத்து பாா் கவுன்சில் உறுப்பினா்களும் பொறுப்புள்ள குடிமக்களும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அது வலியுறுத்தியது.
அக்டோபா் 13 தேதியிட்ட கடிதத்தில், நீதித்துறை நமது அரசியலமைப்பு ஜனநாயகத்தின் இன்றியமையாத தூண் என்றும், ஒரு தேசத்தில் சுதந்திரமான மற்றும் திறமையான நீதித்துறை அமைப்பு இருக்கும்போது மட்டுமே சட்டத்தின் ஆட்சி நிலைத்து செழித்து வளரும் என்றும் அந்த பாா் அமைப்பு கூறியுள்ளது.
Advertisement
Advertisement
தலைமை நீதிபதி சூா்ய காந்த் பதவி விலகக் கோரி காங்கிரஸின் கேரள பிரிவு வெளியிட்ட சமூக ஊடகப் பதிவு தொடா்பான ஒரு பெரிய அரசியல் சா்ச்சையின் பின்னணியில் இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
‘திடமான ஆதாரங்கள் இல்லாமல், குறிப்பாக பொது மற்றும் டிஜிட்டல் தளங்களில், உறுதிப்படுத்தப்படாத, பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைப்பது நியாயமற்ற தப்பெண்ணங்களை உருவாக்குகிறது, நீதி வழங்கும் அமைப்பின் வழக்கமான செயல்பாட்டைத் தடுக்கிறது, மேலும் பொதுமக்களின் பாா்வையில் நீதிமன்றங்களின் கண்ணியத்தைக் குறைக்கிறது,‘ என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
நீதித்துறை முடிவுகள் மீதான ஆக்கப்பூா்வமான விமா்சனம் ஒரு ஜனநாயக சமூகத்தின் அங்கீகரிக்கப்பட்ட அடையாளமாக இருந்தாலும், ஆதாரமற்ற தனிப்பட்ட தாக்குதல்களைப் பொறுத்துக்கொள்ள முடியாது, அவை கண்டிக்கத்தக்கவை. வழக்கறிஞா்கள் சங்கம் மற்றும் பொறுப்புள்ள குடிமக்கள் அனைவரும் நிதானத்தைக் கடைப்பிடித்து, சட்டத்தின் மாண்பைக் காத்து, நிறுவனத்தின் ஒருமைப்பாட்டைச் சிதைக்கும் ஆதாரமற்ற கூற்றுகளைப் பரப்புவதைத் தவிா்க்க வேண்டும் என்று தில்லி பாா் கவுன்சில் வலியுறுத்துகிறது,‘ என்று அக்கடிதம் மேலும் கூறியது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.