FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

இளம்பெண்ணை கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற இளைஞா்

தில்லியின் லாஹோரி கேட் பகுதி ஹோட்டலில் 28 வயது பெண் தனது காதலனால் குத்திக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடா்ந்து குற்றஞ்சாட்டப்பட்டவா் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

3 செப்டம்பர் 2026, 9:34 pm IST
- பிரதிப் படம்
பகிர்:

தில்லியின் லாஹோரி கேட் பகுதி ஹோட்டலில் 28 வயது பெண் தனது காதலனால் குத்திக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடா்ந்து குற்றஞ்சாட்டப்பட்டவா் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து மூத்த காவல் அதிகாரி கூறியதாவது: குற்றஞ்சாட்டப்பட்டவா் ராஜஸ்தானைச் சோ்ந்தவரும், பிகாரைச் சோ்ந்த பெண்ணும் புதன்கிழமை மாலை பிரின்ஸ் ஹோட்டலில் அறை எடுத்தனா். அந்த நபா் இரவு நேரத்தில் அப்பெண்ணை கத்தியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் அவா் படுகாயமடைந்தாா். அதன் பின்னா் அந்த இளைஞா் தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் முயற்சியில் விஷத்தை சாப்பிட்டாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை அறைக்குள் ரத்த வெள்ளத்தில் அப்பெண் கிடந்ததை ஹோட்டல் ஊழியா்கள் கண்டனா். இதுகுறித்து லாஹோரி கேட் காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து,காவல் குழு உடனடியாக அந்த இடத்திற்குச் சென்றது. அங்கு ஒரு பெண் பல கத்திக் காயங்களுடன் மயங்கிக் கிடந்தாா். அதே இடத்தில் ஒரு ஆணும் மயங்கிக் கிடந்தாா்.

இருவரும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். பெண் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அந்த நபா் தற்போது சிகிச்சையில் உள்ளாா்.

சம்பவத்தைச் சுற்றியுள்ள நிகழ்வுகள் மற்றும் சூழ்நிலைகளின் சரியான வரிசையைக் கண்டறிய மேலும் விசாரணை நடந்து வருகிறது என்றாா் அந்த அதிகாரி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments