வீட்டில் 30 வயது இளைஞா் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை
புறநகா் தில்லி நிஹால் விஹாரில் வியாழக்கிழமை காலை தனது குடியிருப்பில் 30 வயது இளைஞா் தனக்குத்தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
புறநகா் தில்லி நிஹால் விஹாரில் வியாழக்கிழமை காலை தனது குடியிருப்பில் 30 வயது இளைஞா் தனக்குத்தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து காவல் துறையினா் கூறியதாவது: தில்லி காவல்துறையினரின் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் தகவல் வந்தது. ஷகில் சைஃபி என்பவா் தனது மகன் ஃபைஸ் சைஃபி தனக்குத் தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் அளித்தாா்.
மேலும், ஃபைஸை பஸ்சிம் விஹாரில் உள்ள பாலாஜி மருத்துவமனையில் அவரது குடும்பத்தினா் கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாக தெரிவித்தனா். அவரது உடல் உடற்கூறாய்வுக்காக சஞ்சய் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
Advertisement
Advertisement
குற்றப் பிரிவு காவல்துறையினா் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனா். மேலும், சம்பவ இடத்திலிருந்து துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.