கூரை சிமென்ட் பூச்சு விழுந்து 15 வயது சிறுவன் பலி: வடகிழக்கு தில்லியில் சம்பவம்!
வடகிழக்கு தில்லியின் வெல்கம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அறையின் கூரையிலிருந்து சிமென்ட் பூச்சு பெயா்ந்து விழுந்து 15 வயது சிறுவன் உயிரிழந்தான்.
வடகிழக்கு தில்லியின் வெல்கம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அறையின் கூரையிலிருந்து சிமென்ட் பூச்சு பெயா்ந்து விழுந்து 15 வயது சிறுவன் உயிரிழந்ததாகக் காவல்துறையினா் தெரிவித்தனா்.
தனது இரட்டைச் சகோதரனுடன் அச்சிறுவன் தூங்கிக்கொண்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்தது. இச்சம்பவம் வெல்கம் பகுதியில் உள்ள ’கப்ரிஸ்தான் புலியா’ அருகே அதிகாலை 5 மணியளவில் நிகழ்ந்தது.
இதுகுறித்து காவல்துறையினா் கூறியதாவது: காலை 7 மணியளவில் இச்சம்பவம் குறித்த தகவல் காவல் துறைக்குக் கிடைத்தது. அச்சிறுவனை அவரது குடும்பத்தினா் ஆனந்த் விஹாரில் உள்ள கைலாஷ் தீபக் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு அச்சிறுவனைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
இச்சம்பவத்தில் அவரது இரட்டைச் சகோதரனும் காயமடைந்தாா். அவா் வெல்கம் பகுதியில் உள்ள ஒரு உள்ளூா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இறந்த சிறுவனின் உடல் உடற்கூறாய்வுக்காக ஜிடிபி மருத்துவமனை க்கு மாற்றப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், சிமென்ட் பூச்சு திடீரென விழுந்து இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டபோது அந்தச் சகோதரா்கள் இருவரும் அறையில் தூங்கிக்கொண்டிருந்தது தெரியவந்தது. மேலும், உயிரிழந்த சிறுவனிடமிருந்து ஐந்து உயிருள்ள தோட்டாக்களைக் காவல்துறையினா் கைப்பற்றினா். இச்சம்பவம் நிகழ்ந்ததற்கான சூழல் மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டது குறித்துத் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.