நேபாள வெள்ளம்: திரிசூலி பஜார் பகுதியில் 5 வயது சிறுவன் உள்பட 3 இந்தியர்கள் மீட்பு!
நேபாள பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நுவாகோட் மாவட்ட திரிசூலி பஜார் பகுதியில் 5 வயது சிறுவன் உள்பட 3 இந்தியர்கள் மீட்பு குறித்து...
நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி காணாமல் போன இந்தியர்களில் திரிசூலி பஜார் பகுதியில் 5 வயது சிறுவன் உள்பட 3 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
புது தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி காணாமல் போன இந்தியர்களில் திரிசூலி பஜார் பகுதியில் 5 வயது சிறுவன் உள்பட 3 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் மீட்கப்பட்ட இந்தியர்களின் மொத்த எண்ணிக்கை 169-ஆக உயர்ந்துள்ளதாகவும், இன்னும் காணாமல் போன 275 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது
மேலும், 1,907 இந்தியர்கள் சீனாவிலிருந்து நேபாளத்திற்குப் பாதுகாப்பாக வந்து சேர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
மீட்கப்பட்டவர்களை விமானம் மூலம் இந்தியா அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகம் செய்து வருவதாக தெரிவித்தார். திபெத் தன்னாட்சிப் பகுதியில் இந்தியப் பயணிகள் யாரும் சிக்கிக்கொண்டிருக்கவில்லை என்று அவர் கூறினார்.
கடந்த மாதம் 26-ஆம் தேதி நேபாளத்தில் கடுமையான திடீர் பெருவெள்ளம் ஏற்பட்டதிலிருந்து, அந்நாட்டிற்கு இந்தியா சுமார் 95 டன் நிவாரணப் பொருள்களை வழங்கியுள்ளதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
நேபாள அரசின் தேவைகளுக்கு ஏற்ப அந்நாட்டிற்கு இந்தியா தொடர்ந்து உதவும். வரும் நாள்களில், நேபாள அரசு கோரியுள்ள கூடுதல் தடயவியல் உபகரணங்கள், பெய்லி பாலங்கள் மற்றும் பிற பொருட்களை அனுப்ப இந்தியா திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புக் குழுவினர் மேலும் பல உடல்களை மீட்டதைத் தொடர்ந்து, நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,344-ஆக உயர்ந்துள்ளது.
நேபாளக் காவல்துறை வெளியிட்ட தரவுகளின்படி, இதுவரை மொத்தம் 843 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன; இதில் 758 பெரியவர்களும் 85 குழந்தைகளும் அடங்குவர். வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து 501 பேரின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும், அவசரக்கால மீட்புக் குழுக்கள் 12,000-க்கும் மேற்பட்டோரை மீட்டிருந்தாலும், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், சுமார் 5,000 பேர் இன்னும் காணாமல் போயிருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளதாகவும், அவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
The External Affairs Ministry has said three more Indian nationals, including a five-year-old child, have been rescued from the flood-hit Trishuli Bazaar area of Nepal, bringing the total count of Indian evacuees to 169.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.