நேபாள வெள்ளம்: இதுவரை 108 இந்தியர்கள் மீட்பு
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் இருந்து இதுவரை 108 இந்தியர்கள் மீட்கப்பட்டிருப்பது பற்றி.....
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் இருந்து இதுவரை 108 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
அதே வேளையில் 275-க்கும் மேற்பட்ட இந்தியர்களை இன்னமும் காணவில்லை என்றும் மேலும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 128 தொடர்புகொள்ள முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் 598 இந்தியக் குடிமக்கள் சீனாவில் இருந்து நேபாளத்திற்குப் பாதுகாப்பாக வந்து சேர்ந்துள்ளதாகவும், சீனப் பகுதியில் உள்ள சுமார் 900 இந்தியர்கள் பாதுகாப்பாகவும் தொடர்புகொள்ளும் நிலையிலும் உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
இதனிடையே இந்திய விமானப்படையின் விமானம் மூலம் 11 டன் நிவாரணப் பொருட்களின் நான்காம் கட்டத் தொகுப்பை இந்தியா நேபாளத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த விமானத்தில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கான உபகரணங்களுடன் கூடிய தொழில்நுட்பக் குழு மற்றும் டிஎன்ஏ பகுப்பாய்விற்கான தடயவியல் உபகரணங்களுடன் கூடிய தடயவியல் நிபுணர்கள் குழுவும் சென்றுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
புதன்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் பலியானவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணியில் நேபாள அதிகாரிகளுக்கு இந்தத் தடயவியல் குழு உதவும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். திபெத் எல்லையின் அருகில் அமைந்துள்ள நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போடே கோஷி ஆற்றில், கடந்த ஆக. 26 ஆம் தேதி ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் அங்குள்ள கட்டமைப்புகள் மற்றும் கட்டடங்கள் அடித்துச் செல்லப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Over 275 Indians remained missing while 108 others were rescued following the devastating flash floods along the Nepal-Tibet border four days back, the Ministry of External Affairs (MEA) said on Saturday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.