FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நூல் அரங்கம்

ஜவ்வாதுமலை தெய்வங்களின் புலம் பெயர்வு வாழ்வியல்

தமிழர்களின் பழைமையான வழிபாட்டு முறைகளைத் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல் இது.

Updated On : 17 ஆகஸ்ட் 2026, 2:07 pm IST
பகிர்:

ஜவ்வாதுமலை தெய்வங்களின் புலம் பெயர்வு வாழ்வியல்- க.ஜெய்சங்கர்; பக்.190; ரூ.200; இளவேனில் பதிப்பகம், தாரமங்கலம், சேலம் மாவட்டம்-636 502. ✆ 99416-62045.

மனித வாழ்வில் புலம்பெயர்தல் என்பது தவிர்க்க முடியாதது. வறட்சி, போர், வாழ்வாதார தேடல் போன்றவை இடப்பெயர்வுக்கான முக்கிய காரணங்களாக இருக்கின்றன. வாழ்ந்த இடத்தின் சுவடுகளையும் புலம்பெயர்ந்த இடத்தில் பாதுகாப்பையும் தரக்கூடியவையாக தெய்வங்கள் இருப்பதாக மனிதன் நம்புகிறான். அதனால்தான் புலம்பெயர்ந்த இடத்துக்கு தெய்வத்தையும் அழைத்துச் செல்கிறான்.

இந்த கலாசார பண்பாட்டை ஆசிரியர் க.ஜெய்சங்கர் எழுதிய இந்நூல் விரிவாகப் பேசுகிறது.

Advertisement

Advertisement

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் ஒன்றான ஜவ்வாது மலையும் அங்கு வாழும் பழங்குடி மக்களின் வாழ்வும் பற்றி ஆவணப்படுத்துகிறது இந்த நூல். புலம்பெயர்ந்த 13 தெய்வங்களை ஆசிரியர் இந்த நூலில் விரிவாக குறிப்பிட்டிருக்கிறார்.

பிடிமண் கோயிலான ஏழுமுக காளியம்மன், துன்புறுத்தல் வாழ்வியலுக்கு உள்ளான நாச்சியம்மாள் என்ற சிறுமி தும்பை நாச்சியம்மன் ஆனது, வழிபட்டவர்களுடன் புலம்பெயர்ந்த பேர்குடியம்மன், தேவை சார்ந்த புலம்பெயர்வாக மலையனூர் அங்காளம்மன் ஜவ்வாது மலைக்கு சுண்ணாம்பு சுவடியம்மனாக வந்தது, தொழில் நிமித்தமாக புலம்பெயர்ந்து தெய்வங்களான காத்தவராயன், குலதெய்வத்தைத் தேடி அலைந்தபோது தானாக வந்த தீப்பாஞ்சாள், ஆற்று வெள்ளப்பெருக்கில் அடித்து வந்த பொய் நாச்சியம்மன், போர் காரணமாக புலம்பெயர்ந்த தெய்வமான கீழ்சேப்பளி காளியம்மன் உள்பட ஒவ்வொரு தெய்வத்தின் தோற்றம், கோயில் வரலாறு, வழிபாட்டு முறைகள், திருவிழாக்கள், கதைகள் என எல்லாவற்றையும் ஆசிரியர் கள ஆய்வு செய்து விரிவாக பதிவு செய்திருக்கிறார்.

தமிழர்களின் பழைமையான வழிபாட்டு முறைகளைத் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments