பிரபலங்களின் உளவியல்
அன்றாடம் சந்திக்கும் மனிதர்கள் முகத்தைப் பார்த்து அல்ல, மனதைப் பார்த்து அறிந்து பேச வேண்டும் என்பதை இந்த நூல் உணர்த்துகிறது.
பிரபலங்களின் உளவியல்-எஸ். சரத்குமார்; பக். 152; ரூ. 190; கிழக்கு பதிப்பகம், சென்னை - 600 014. ✆ 95000 45609.
பிரபலங்களை வாட்டி வதைத்த வலிகள், வேதனைகள், அச்சங்கள், பாதிப்புகள், பரிதவிப்புகளையெல்லாம் அரசு மன நல மருத்துவரான நூலாசிரியர் தொகுத்து நூலாக்கியுள்ளார்.
சார்லஸ் டார்வின், ஆப்ரஹாம் லிங்கன், பீத்தோவன், ஃபிரான்ஸ் காஃப்கா, எர்னஸ்ட் ஹெமிங்வே, வெர்ஜீனியா உல்ஃப், ரிச்சர்ட் டாட், மர்லின் மன்ரோ, தஸ்தயேவ்ஸ்கி, வின்சென்ட் வான்கோ, சில்வியா பிளாத், ஜூடி கார்லேண்ட், குரு தத், எலி வீசல், எட்வர்ட் மங்க், மைக்கேல் ஜாக்சன் உள்ளிட்ட 17 பிரபலங்கள் அவர்கள் வாழ்ந்த காலம் மட்டுமின்றி, பெயரைச் சொன்னாலே இன்றும் உலகெங்கும் அறியப்படுபவர்கள் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
Advertisement
Advertisement
தங்கள் சார்ந்த துறைகளில் இன்றளவும் அவர்கள் போற்றப்படுகின்றனர். ஆனால், அவர்கள் அன்றாட வாழ்வில் மேற்கொண்ட போராட்டங்கள் வாழ்வின் உயரத்திலும், சரிவிலும், வெளிச்சத்திலும், இருளிலும் எத்தனை தாக்கங்களைச் செலுத்தின என்பதையும் எத்தனை வடுக்களை அவர்கள் சுமந்திருக்கின்றனர் என்பதையும் நூலாசிரியர் நுணுக்கமாக ஆராய்ந்திருக்கிறார்.
பிரபலங்களை அறிவதென்பது நம்மையும், நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் அறிய உதவும் ஒரு பகுதிதான் என்பார்கள். அதுபோல், பிரபலங்களின் வழியில் நம்மையும், நம்மைச் சார்ந்தோரையும் அறிய உதவும் அற்புதமான நூல் இது.
உடல் வலிகள், குறிப்பிட்ட பொருள்கள், குறிப்பிட்ட மனிதர்கள்... என்று ஏதாவது ஒரு வகையில் மனிதர்களை அச்சம் துரத்தும் என்றும், அதைப் பார்த்து பயப்பட்டால் வாழ்வில் முன்னேற முடியாது என்பதை இந்த நூல் விளக்குகிறது.
அன்றாடம் சந்திக்கும் மனிதர்கள் முகத்தைப் பார்த்து அல்ல, மனதைப் பார்த்து அறிந்து பேச வேண்டும் என்பதை இந்த நூல் உணர்த்துகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.