FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நூல் அரங்கம்

தமிழர் பண்பாட்டில் தாமரை

மருத நிலத்தின் முதன்மை அடையாளமாக தாமரை மலரே திகழ்ந்தது. நீர்நிலைகளில் தாமரை மலர்ந்திருப்பது நாட்டின் செழிப்பைக் குறிப்பதாகப் புலவர்கள் பாடியுள்ளனர்.

Updated On : 13 ஜூலை 2026, 6:05 pm IST
பகிர்:

தமிழர் பண்பாட்டில் தாமரை- சாத்தான்குளம் அ. இராகவன்; பக். 216; ரூ. 230; ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை - 600 017, ✆ 044- 2433 1510.

தமிழர்களின் பண்பாடு, இலக்கியம், ஆன்மிகம் மற்றும் அன்றாட வாழ்வில் தாமரை மலர் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. தனித்துவமான அழகாலும், தூய்மையாலும் மனித வாழ்வியலுக்குப் பெரும் தத்துவங்களை உணர்த்தும் மலராக தாமரை திகழ்கிறது.

'தமிழர் பண்பாட் டில் தாமரை' என்ற இந்த நூலில், தாமரையின் சிறப்பு, காவியத்தில், இலக்கியங்களில் பெறும் இடம், சமய நெறி, பண்பாடு, ஓவியம், கோலங்களில் தாமரை மாட்சி, தாமரைக் காசு, தத்துவத்தின் அடிப்படையில் தாமரை, மருத்துவத்தில் தாமரை மாட்சி, தாமரை வடிவில் தமிழக நகரமைப்பு, நாட்டியக் கலை, தமிழிசையில் தாமரை என 25 தலைப்புகளில் தாமரை மலர் குறித்து அறியாத பல தகவல்கள் விரிவாகப் பேசப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

சங்க இலக்கியங்கள் தாமரை மலரை மிக உன்னதமாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன. செந்தாமரை, வெண்தாமரை (அம்பல்) எனப் பரவலாகப் பேசப்படுகின்றன. பெண்களின் முகம், கண்கள், உள்ளங்கை, உள்ளங்கால்களுக்கு தாமரை மலர் உவமையாகக் கூறப்பட்டுள்ளது.

மருத நிலத்தின் முதன்மை அடையாளமாக தாமரை மலரே திகழ்ந்தது. நீர்நிலைகளில் தாமரை மலர்ந்திருப்பது நாட்டின் செழிப்பைக் குறிப்பதாகப் புலவர்கள் பாடியுள்ளனர்.

திருமால், பிரம்மன், கலைமகள், அலைமகள் ஆகிய தெய்வங்களின் இருப்பிடமாகவும், அவர்கள் கைகளில் ஏந்தும் மலராகவும் தாமரை விளங்குகிறது. இறைவனின் திருவடிகளை 'மலரடி' என்று போற்றுவது தமிழ் மரபு. 'மனிதர்கள் பற்று அற்றவர்களாக (தாமரை இலைத் தண்ணீர் போல) வாழ வேண்டும்' என்ற உன்னத தத்துவத்தைத் தமிழ் ஞானிகளும் சித்தர்களும் போதித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments