FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நூல் அரங்கம்

பெரிய புராணம்

நேரடியாக உரைநடையில் பெரிய புராணத்தைப் படிக்க விரும்புவோர் உரையைப் படிக்கலாம்.

Updated On : 20 ஜூலை 2026, 6:36 pm IST
பகிர்:

பெரிய புராணம் (மூலமும் உரையும்)-உரையாசிரியர்: டாக்டர் சாது சு. ஸ்ரீனிவாஸ்; பக். 1,215; ரூ. 860; ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், சென்னை-600 035, ✆ 94440 21661.

பெரிய புராணம், கம்பராமாயணம் போன்ற தமிழ் இலக்கியங்களை அனைவரும் படிக்க ஆர்வம் காட்டாமல் இருப்பதற்கு ஒரே காரணம்- அந்த மரபுக் கவிதைகளைப் படிப்பது கடினம் என்பது மட்டுமே.

இதற்காக பல உரையாசிரியர்கள் பதவுரை, பொழிப்புரை, விளக்கவுரை என்று தனித்தனியாக எழுதி, அச்சிட்டு நூல்களை கொண்டு வந்தனர். ஆனால், அதுவும் சலிப்பு தருவதாகவும் நிகழ்தருண மகிழ்வு அளிக்காதவையாகவும் இருந்தன. அந்தக் குறையை நிவர்த்தி செய்துள்ளார் சேக்கிழாரின் பெரிய புராணத்துக்கு உரை எழுதியுள்ள டாக்டர் சாது சு. ஸ்ரீனிவாஸ்.

Advertisement

Advertisement

கவிதை வரிகளின் ஓட்டத்துக்கு ஏற்ப எளிய உரையை ஒவ்வொரு பாடலுக்கும் கீழே அமைத்துள்ளார். கவிதையைப் படித்து ரசிப்பவர் கவிதையைப் படிக்கலாம். நேரடியாக உரைநடையில் பெரிய புராணத்தைப் படிக்க விரும்புவோர் உரையைப் படிக்கலாம்.

இந்தப் பாணி கல்லூரிகளில், ஷேக்ஸ்பியர் நாடகங்களுக்குக் கையாளப்பட்டது. இடது பக்கத்தில் ஷேக்ஸ்பியர் நாடகத்தின் விக்டோரியா காலத்து ஆங்கிலம் இருக்கும். வலது பக்கத்தில் இன்று புழக்கத்தில் உள்ள ஆங்கிலச் சொற்களில் அதே உரையாடல் எளிமையாக அமைந்திருக்கும்.

இன்றைய நவீனயுகத்தில் கம்பராமாயணம், சிலப்பதிகாரம், பெரிய புராணம், திருவாசகம், தேவாரம் எல்லாவற்றையும் இதே பாணியில் கவிதை, அதே ஓட்டத்தில் உரைநடை அமைத்து நூல்கள் வெளியானால், இளைய தலைமுறையினர் பயனடைவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments