FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நூல் அரங்கம்

பத்துப்பாட்டு பொருள் விளக்கம்

ஒவ்வொரு பாட்டும் நன்கு ஆராயப்பட்டு, அதனதன் சிறப்பியல்புகள், அதன் ஆசிரியர்கள் குறித்த குறிப்புகள், பொருட் சிறப்புகள், சில பாட்டுகளின் பெயர்க்காரணம், மரபுகள் காட்டப்பட்டுள்ளன.

Updated On : 27 ஜூலை 2026, 3:27 pm IST
பகிர்:

பத்துப்பாட்டு பொருள் விளக்கம் - முனைவர் அ. ஜம்புலிங்கம்; பக். 286; ரூ. 600; இந்துமதி பதிப்பகம், சிதம்பரம் - 608 001. ✆ 93459 79726.

முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை மூன்றும் அகப்பொருள் குறித்தவை. திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம், மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை ஆகிய ஏழும் புறப்பொருள் குறித்தன. இவற்றில் 5 ஆற்றுப்படை நூல்கள்.

பத்துப்பாட்டு என்னும் பெயர் வழக்கம் முதலாவதாக 'தொல்காப்பியம்' இளம்பூரணர் உரை 'செய்யுளியல்' நூற்பா 150-இல் காணப்படுகிறது. பாட்டுகளின் அடி அளவு 103 அடி சிறியதாகவும், 782 அடி மிகப் பெரியதாகவும் கொண்டது. மொத்த அடிகள் தொகை 3,552.

Advertisement

Advertisement

'பத்துப்பாட்டு பொருள் விளக்கம்' என்னும் இந்நூலின் வழியாக பாடல் அமைப்பு முறை, பொதுச் செய்திகள், சிறப்புச் செய்திகள், பா நலம், மேலும் பண்டைத் தமிழரின் பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றை நன்கு அறியமுடிகிறது.

ஒவ்வொரு பாட்டும் நன்கு ஆராயப்பட்டு, அதனதன் சிறப்பியல்புகள், அதன் ஆசிரியர்கள் குறித்த குறிப்புகள், பொருட் சிறப்புகள், சில பாட்டுகளின் பெயர்க்காரணம், மரபுகள் காட்டப்பட்டுள்ளன.

திருமுருகாற்றுப்படை-ஆறுமுகநாவலர், முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை-மறைமலையடிகள், பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை-இராகவையங்கார், பெரும்பாணாற்றுப்படை, திருமுருகாற்றுப்படை-யாழ்ப்பாணம் சு.அருளம்பலம், நெடுநல்வாடை-கே.கோதண்டபாணி, திருமுருகாற்றுப்படை, குறிஞ்சிப்பாட்டு-நல்லுசாமிப்பிள்ளை, முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை-ஜே.எம்.சோமசுந்தரபிள்ளை, பட்டினப்பாலை- கே.கோதண்டபாணி (ஆங்கில பெயர்ப்பு), குறிஞ்சிப்பாட்டு-ஜி.யு. போப், மதுரைக்காஞ்சி-வி.கந்தசாமி என புத்துரைகளும் ஆராய்ச்சி உரைகளும், பொழிப்புரைகளும் எழுதப்பட்டுள்ளன. அந்த வரிசையில், பத்துப்பாட்டுக்கு சிறந்த உரை எழுதியுள்ளார் முனைவர் அ.ஜம்புலிங்கம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments