விஜயநகரப் பேரரசின் எழுச்சியும் வீழ்ச்சியும்
இந்தப் பேரரசின் பெருமை தமிழகத்தில் உள்ளவர்களுக்கு தெரியாது. இந்த நூல் அந்தக் குறையைத் தீர்த்து வைக்கிறது.
விஜயநகரப் பேரரசின் எழுச்சியும் வீழ்ச்சியும்-முனைவர் குரு. ஜெகந்நாதன்; பக். 248; ரூ. 250; சுரா பதிப்பகம், சென்னை-600 040, ✆ 044- 4204 3273.
தமிழகத்தில் பல்லவ, சோழ, பாண்டிய மன்னர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் கிபி.1336 முதல் 1645 வரை சுமார் 300 ஆண்டுகளுக்கு தென்னிந்தியாவை ஆட்சி செய்த விஜயநகர பேரரசின் சிறப்பை ஆந்திர- கர்நாடக மக்களும் மறந்துவிட்டனர். விஜயநகர பேரரசால் இஸ்லாமிய படைகளின் தாக்கம் தென்னிந்தியாவில் இல்லை. அரண் போன்று தடுத்திருந்தனர். இருப்பினும், இந்தப் பேரரசின் பெருமை தமிழகத்தில் உள்ளவர்களுக்கு தெரியாது. இந்த நூல் அந்தக் குறையைத் தீர்த்து வைக்கிறது.
விஜயநகர பேரரசின் மன்னர்களில் கிருஷ்ண தேவராயர் ஆட்சிக் காலம் ஆன்மிகப் பொற்காலமாகத் திகழ்ந்தது. விஜயநகரம் வந்த வெளிநாட்டினர் எழுதிய குறிப்புகளில் அந்நகரின் அழகும் விசாலமும் வர்ணிக்கப்பட்டுள்ளன. ஆனால், அத்தகைய அழகு நகரம் பிற்காலத்தில் முகலாய படையெடுப்புகளால் சிதைக்கப்பட்டு விட்டது. அதன் மிச்சமாக ஹம்பி மட்டும் இன்றளவும் உள்ளது.
Advertisement
Advertisement
செஞ்சி, தஞ்சை, மதுரை நாயக்கர்கள் இந்தப் பேரரசின் பிரதிநிதிகளாக இருந்து ஆட்சி செய்தனர். ஆங்கிலேயர் வரவு இவர்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது. முந்நூறு ஆண்டு கால ஆட்சியை மிக எளிதாக தமிழில் கிடைக்கச் செய்துள்ளார் நூலாசிரியர்.
விஜயநகர பேரரசின் மேன்மையை வெளியுலகுக்கு கொண்டு வந்தவர்கள் ஆங்கிலேயர்கள். ஆந்திர மாநிலத்தில் உயர் அதிகாரியாக இருந்த ராபர்ட் சீவெல் முதன்முதலாக விஜயநகர பேரரசு மற்றும் அதன் கலைப் படைப்புகளைக் கண்டு வியந்தார். விஜயநகர ஆட்சிக் காலத்தில் வருகை புரிந்த போர்ச்சுகீசியர்கள் எழுதிய பயண நூல்களையும் கல்வெட்டுகளையும் ஆதாரமாகக் கொண்டு அவர்தான் இந்த மன்னர்களின் வரலாற்றை ஒழுங்குபடுத்தி, மறக்கப்பட்ட விஜயநகர பேரரசின் வரலாறு என்ற புத்தகத்தை வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக பலரும் ஆய்வுகள் செய்து பல தகவல்களை வெளியுலகுக்கு கொண்டுவந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.