சிந்தனைக் கவிஞர் கவிதாசனின் வெற்றிப் படிக்கட்டுகள்
118 கேள்விகளுக்கு கவிதாசன் அளித்த பதில்கள் ஒவ்வொன்றும் படிப்போருக்கு உற்சாக மூட்டும் வகையில் உள்ளன.
சிந்தனைக் கவிஞர் கவிதாசனின் வெற்றிப் படிக்கட்டுகள்- தொகுப்பு: முனைவர் பொன். சங்கர்; பக். 144; ரூ. 150; குமரன் பதிப்பகம், சென்னை- 600 017, ✆ 044- 2435 3742.
கோவையைச் சேர்ந்த கவிதாசன் தன்னம்பிக்கை கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர் உள்ளிட்ட பன்முகத்தன்மைகள் கொண்டதுடன், தமிழ் இலக்கிய உலகில் தனித்து இயங்கும் படைப்பாளர். மாணவர்கள், தொழில் துறையினர் மத்தியில் தன்னம்பிக்கை உரைகளை நிகழ்த்தி சாதனையாளராக்கியவர். இவர் கடந்து வந்த வெற்றிப் பாதையை மக்கள் அறியும் வகையில் அவருடன் நேர்காணல் செய்த தமிழாசிரியரான நூலாசிரியர் தொகுத்து நூலாக்கியுள்ளார்.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய முயற்சித்தது, கோவை மாவட்டத்தில் காவல் நிலையங்களில் நூலகங்கள் அமைக்கும் முயற்சி, சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளியில் மாணவர்களின் தனித்திறன்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 'நெல்லிக்கனி' என்ற பெயரில் தன்னம்பிக்கை பயிற்சியை அளித்தது என்று தனி மனிதராக கவிதாசன் செய்துள்ள சாதனைகள் வியக்க வைக்கின்றன.
Advertisement
Advertisement
118 கேள்விகளுக்கு கவிதாசன் அளித்த பதில்கள் ஒவ்வொன்றும் படிப்போருக்கு உற்சாக மூட்டும் வகையில் உள்ளன. மகான்கள், சாதனையாளர்கள், தலைவர்களின் கருத்துகளுடன் தனது சொந்தக் கருத்துகளை அவர் அளித்துள்ளார்.
வாழ்க்கையின் மகத்துவம், வாழ வேண்டிய அவசியம், எதிர்நீச்சல் போடும் இயல்பு, வெற்றி பெற முயற்சியும் பயிற்சியும் அவசியம், நம்பிக்கை வெற்றியின் மந்திரம், இளம்வயதிலேயே உழைக்க வேண்டும், உயர்ந்தாலும் உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்றெல்லாம் சாதனையாளராக மின்ன வழிகாட்டுகிறார்.