FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஆன்மிகம்

பனிரெண்டார் பக்த திருக்கூட்டம் சார்பில் வைரம் பதித்த வேலுக்கு பூஜை

பழனி வாசவி மஹாலில் திங்கள்கிழமை பனிரெண்டார் பக்த திருக்கூட்டத்தார் சார்பில் வைரம் பதிக்கப்பட்ட வேல் வைத்து இராஜ அலங்காரம் செய்யப்பட்டு முருகனுக்கு சிறப்பு பூஜைகள்

Updated On : 13 ஏப்ரல் 2015, 8:45 pm IST
பகிர்:

பழனி வாசவி மஹாலில் திங்கள்கிழமை பனிரெண்டார் பக்த திருக்கூட்டத்தார் சார்பில் வைரம் பதிக்கப்பட்ட வேல் வைத்து இராஜ அலங்காரம் செய்யப்பட்டு முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் விஜயாபுரம், பொன்னுக்காளிபாளையம், அமராபதிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பனிரெண்டார் பக்த திருக்கூட்டத்தார் வருடா வருடம் பங்குனி உத்திரம் முடிந்த பின் பழனிக்கு வந்து தீர்த்தக்காவடி செலுத்துவது வழக்கமாகும்.  88வது ஆண்டு நிகழ்ச்சியாக திருக்கூட்டத்தார் கடந்த ஏப்ரல்.3ம் தேதி பவானி ஆற்றில் தீர்த்தம் முத்திரித்து 10 நாட்கள் பாதயாத்திரையாக பழனி வந்து ஞாயிற்றுக்கிழமை கிரிசுற்றி மூலவர் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்கு தீர்த்தம் அபிஷேகம் செய்தனர்.

பத்துநாள் பாதயாத்திரையின் போது திருக்கூட்டத்தாருக்கு கட்டளைதாரர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.  பக்த திருக்கூட்டத்தார் பாதயாத்திரையின் போது அவரவர் ஊர்களின் சார்பில் வெள்ளிவேல் கொண்டு வருகின்றனர்.  மலைக்கு சென்ற பின்பு திங்கள்கிழமை பழனி தெற்குரதவீதி வாசவி மஹாலில் பல்வேறு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் செய்து வழிபாடு செய்தனர்.  பாதயாத்திரையின் போது கொண்டு வரப்பட்ட வெள்ளிவேல்களுக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு இராஜஅலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.  பின்னர் வைரம் பதிக்கப்பட்ட தங்கவேல், மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.  தொடர்ந்து பழனிமலைபோல அன்னத்தை வடிவமைத்து லட்டு, வடைகளை படிகளாக படைத்து சாம்பார், பொறியல், அப்படம் போன்றவற்றால் அலங்காரங்கள் செய்து மலைமேல் சிவன் இருப்பது போல வடிவமைத்து மாகேஸ்வர பூஜை நடத்தப்பட்டது. 

Advertisement

Advertisement

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பாதயாத்திரைக் குழு தலைவர் சபாபதி, செயலர் பத்மநாபன் என்ற முருகு, செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் செய்திருந்தனர்.  இதுகுறித்து குழு தலைவர் சபாபதி கூறுகையில்   இங்குள்ள வைரம் பதித்த தங்கவேல், வெள்ளிவேல் அனைத்தும் காவடிக்குழுவுக்கு பொதுவானது ஆகும். பத்துநாட்கள் தீர்த்த பாதயாத்திரையின் போது 650க்கும் மேற்பட்டோர் இருவர், இருவராக சாலைப்போக்குவரத்து பாதிப்பின்றி நடந்து வருவதும், கிளம்பும்போது எந்த வரிசையில் யார் இருக்கின்றனரோ அவர்தான் பழனி வந்தடையும்போதும் இருப்பதும் சிறப்பம்சமாகும் என்றார். கூட்டத்தில்  ஒருவரை முந்தி ஒருவர் செல்வதோ, வழியில் வெளிஇடத்தில், வெளிநபரிடம் எந்த பொருளையும் பெற்று அருந்தவோ, சாப்பிடுவதோ இல்லை.  உணவுகளை இவர்களை தயாரித்துக் கொள்கின்றனர். தவிர, பாதயாத்திரை நிறைவில் கூட்டத்தாரே பஞ்சாமிர்தம் தயாரித்து அவர்களுக்குள் பகிர்ந்தும் கொள்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments