FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஆன்மிகம்

வைகாசி விசாகத் திருவிழா : திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத்திருவிழாவை முன்னிட்டு திங்கட்கிழமையன்று...

Updated On : 1 ஜூன் 2015, 2:33 pm IST
பகிர்:

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத்திருவிழாவை முன்னிட்டு திங்கட்கிழமையன்று லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திர திருவிழாவான வைகாசி விசாகத் திருவிழா வசந்த விழாவாக கடந்த மாதம் 23-ம் தேதி தொடங்கி, பத்து நாட்கள் நடைபெற்றது. தொடர்ந்து பத்து நாட்கள் நடந்த நிறைவு நாளான திங்கட்கிழமை வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு கோயில்  அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2.00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெற்றது. மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்,

அலங்காரமாகி, விழாவின் முக்கிய நிகழ்வான முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவம் மாலையில் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை ஆகி தங்கச்சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து திருக்கோயில் சேர்ந்து திருவிழா நிறைவுபெறுகிறது.

Advertisement

Advertisement

விழாவை முன்னிட்டு கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் விரதமிருந்து, பாதயாத்திரையாக வந்ததால் திருக்கோயில் வளாகமே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. பாதுகாப்பு பணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் தலைமையில், திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் கோபால், காவல் ஆய்வாளர்கள் கோ.பத்மநாப பிள்ளை, பி.பட்டாணி உள்ளிட்ட காவல்துறையினர், தீயணைப்பு படையினர், ஊர்க்காவல் படையினர்; ஈடுபட்டனர். பக்தர்களின் வசதிக்காக பல்வேறு வழித்தடங்களிலிருந்து கூடுதலாக சிறப்பு பேருந்துகள்;

இயக்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் (பொ) ஆர்.பொன்சுவாமிநாதன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments