FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

பாதுகாப்பு நிறைந்த நகரங்களின் பட்டியலில் திருப்பதிக்கு 2ஆவது இடம்

நாட்டில் பாதுகாப்பு நிறைந்த நகரங்களின் தரவரிசைப் பட்டியலில் திருப்பதிக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது.

Updated On : 21 ஆகஸ்ட் 2018, 2:51 am IST
பகிர்:

நாட்டில் பாதுகாப்பு நிறைந்த நகரங்களின் தரவரிசைப் பட்டியலில் திருப்பதிக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது.
மத்திய நகர்ப்புற வளர்ச்சி கழகம் நாட்டில் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த நகரங்களின் தரவரிசைப் பட்டியலை தயாரிப்பதற்காக நாட்டில் உள்ள 111 நகரங்களைத் தேர்ந்தெடுத்து பரிசீலனை செய்தது. 
அந்த வகையில் பாதுகாப்பு மற்றும் காவல் அம்சம் நிறைந்த நகரங்களின் தரவரிசை பட்டியலை உருவாக்கியது. அதில், திருப்பதிக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. திருப்பதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள காவல்துறை விதிமுறைகள் பாராட்டுகளை பெற்றுத் தந்துள்ளன. 
இதையறிந்து ஆந்திர காவல்துறைத் தலைவர் தாக்குர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 
மேலும் வரவுள்ள நாள்களில் பாதுகாப்பு மேம்பாட்டில் தனி கவனம் செலுத்த உள்ளதாக அவர் தெரிவித்தார். முன்னதாக, மக்கள் வாழ்வதற்குத் தகுதியுள்ள நகரங்களின் பட்டியலில் திருப்பதி 4ஆவது இடத்தை பிடித்துள்ளதாக சில தினங்களுக்கு முன் ஒரு பட்டியல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments