கிரிவலப் பாதையில் காபி கடைக்கு சீல் வைக்க உத்தரவு
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள காபி கடைக்கு சீல் வைக்க வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள காபி கடைக்கு சீல் வைக்க வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பாலி தீர்த்தம் அருகே இருந்த கோயிலை இடித்து விட்டு, அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கும்பகோணம் காபி கடை நடத்துவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவபாபு என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் காணொலிக் காட்சி மூலம் விசாரணைக்கு வந்தது. அப்போது, திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரை ஆஜராகி, வழக்கு தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்தார்.இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், கிரிவல பாதையில் கோயிலை இடித்து கட்டப்பட்டுள்ள காபி கடைக்கு சீல் வைக்க, வருவாய்த்துறை மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை இரண்டு வார காலத்துக்கு ஒத்திவைத்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.