கும்பகோணம் ஸ்ரீ நாகேஸ்வரர் ஆலய வைகுண்ட ஏகாதசி உற்சவத்தில் கருட சேவை
கும்பகோணத்தில் உள்ள சைவ ஆலயமான, பிரஹன்நாயகி சமேத - ஸ்ரீ நாகேஸ்வரர் ஆலயத்தில், அருள்மிகு ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சித்திர ரூபத்திலும், ஸ்ரீவேணு கோபாலர் உற்சவ மூர்த்தியாகவும், ஸ்ரீ சிவகாமசுந்தரி
கும்பகோணத்தில் உள்ள சைவ ஆலயமான, பிரஹன்நாயகி சமேத - ஸ்ரீ நாகேஸ்வரர் ஆலயத்தில், அருள்மிகு ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சித்திர ரூபத்திலும், ஸ்ரீவேணு கோபாலர் உற்சவ மூர்த்தியாகவும், ஸ்ரீ சிவகாமசுந்தரி ஸமேத - ஸ்ரீ நடராஜப்பெருமான் சன்னதியில் எழுந்தருள் பாலித்து வருகிறார்கள்.
வைணவ சமயத்தில் உள்ளபடி, 18ஆம் தேதி காலை, வைகுண்ட ஏகாதசி தினத்தினை முன்னிட்டு, அருள்மிகு ஸ்ரீவேணுகோபால ஸ்வாமி உற்சவர், மங்கள இன்னிசை முழங்க, கருட வாகனத்தில் வீதியுலா புறப்பாடு மிகச் சிறப்பாக நடைப்பெற்றது.
இவ்விழா ஏற்பாட்டினை திருக்கோயில் நிர்வாகம், மற்றும் ஸ்ரீ நாகேஸ்வரர் பக்தர்கள் செய்திருந்தார்கள்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.