முகப்பு
செய்திகள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்கு ஜூன் 23-ல் வருஷாபிஷேகம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இம்மாதம் 23-ம் தேதி ஆனி வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.

Updated On : 20 ஜூன் 2018, 1:01 pm IST
பகிர்:

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இம்மாதம் 23-ம் தேதி ஆனி வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.

இதுகுறித்து கோயில் இணை ஆணையர் பா.பாரதி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் வருஷாபிஷேகம் நடைபெறுகிறது. அதன்படி, நிகழாண்டுக்கான வருஷாபிஷேகம் இம்மாதம் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. 

இதையொட்டி, அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், பின்னர் கும்பங்கள் வைக்கப்பட்டு யாக பூஜை ஆகியவை நடைபெறுகின்றன. 

Advertisement

Advertisement

தொடர்ந்து, காலை 8.30 - 9.00 மணிக்குள் வருஷாபிஷேகம் நடைபெறுகிறது. இரவில் மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments