திருவண்ணாமலையில் இன்று கிரிவலம் வர உகந்த நேரம்
ஆனி மாத பௌர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் புதன்கிழமை கிரிவலம் வர உகந்த நேரம் எது என்பதை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆனி மாத பௌர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் புதன்கிழமை கிரிவலம் வர உகந்த நேரம் எது என்பதை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பௌர்ணமி நாள்களில் திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவிலான கிரிவலப் பாதையை வலம் வந்து ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மனை தரிசித்தால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
எனவே, ஒவ்வொரு மாத பௌர்ணமியன்றும் திருவண்ணாமலையில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்து, செல்கின்றனர்.
இந்த நிலையில், ஆனி மாத பௌர்ணமி புதன்கிழமை (ஜூன் 27) காலை 9.24 மணிக்குத் தொடங்கி, வியாழக்கிழமை (ஜூன் 28) காலை 11.02 மணிக்கு முடிவடைகிறது.
எனவே, திருவண்ணாமலையில் பக்தர்கள் இந்த நேரத்தில் கிரிவலம் வரலாம் என்று ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.