எந்தக் கடவுளுக்கு எந்த மலர்களால் பூஜித்தால் நினைத்தது நிறைவேறும்?
மலர்கள் மென்மையானவை என்பதால் தான் கடவுள் மலர்களில் வாசம் செய்வதாக சொல்லப்படுகிறது.
மலர்கள் மென்மையானவை என்பதால் தான் கடவுள் மலர்களில் வாசம் செய்வதாக சொல்லப்படுகிறது. தினமும் புதிதாக தோன்றும் மலர்களால் கடவுளை பூஜிக்கும்போது இறைவன் மனம் குளிர்கிறது. இதனால், அகம் மகிழ்ந்து பக்தர்கள் வேண்டிய வரங்களைத் தந்து பாவங்களைப் போக்கி அருள் புரிவதாக ஐதீகம்!
எனவேதான், கடவுளுக்குப் பூஜை செய்யும் போது பிற பூஜைப் பொருட்களை கொண்டு பூஜை செய்வதை விட, மலர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. எந்த மலர்களில் எந்தக் கடவுள் வாசம் செய்கிறார் என்பதைப் பார்ப்போம்.
இறைவனுக்கு உகந்த மலர்கள்
Advertisement
Advertisement
• வில்வ இலை - சிவன்
• துளசி இலை - திருமால்
• அலரி - பிரம்மன்
• தாமரை - லட்சுமி
• நீலோத்பலம்- உமாதேவி
• கோங்கம், வெண் தாமரை - சரஸ்வதி
• அருகம் பூ- விநாயகர்
• செண்பகப்பூ - சுப்பிரமணியர்
• நந்தியாவட்டை- நந்தி
• மதுமத்தை - குபேரன்
• எருக்கம் - சூரியன்
• வன்னி இலை - அக்னி
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.