FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சகல சௌபாக்கியங்களை அளிக்கக்கூடிய தத்தாத்ரேயர்

தத்தாத்ரேயர் ஜெயந்தியை முன்னிட்டு வேளச்சேரியில் உள்ள தத்தாத்ரேயருக்கு சிறப்பு வழிபாடுகள் நாளை நடைபெறுகிறது. 

30 ஜனவரி 2024, 6:30 pm IST
பகிர்:

தத்தாத்ரேயர் ஜெயந்தியை முன்னிட்டு வேளச்சேரியில் உள்ள தத்தாத்ரேயருக்கு சிறப்பு வழிபாடுகள் நாளை நடைபெறுகிறது. 

சென்னை, வேளச்சேரியில் தத்தாத்ரேயர் கோவில் அமைந்துள்ளது. 1987-ல், கணபதி சச்சிதானந்த சுவாமியால் நிர்மாணிக்கப்பட்டது. கடந்த மார்ச் 4-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 

சென்னையிலேயே தத்தாத்ரேயர் பிரதானமாக விளங்குவது இவ்வாலயத்தில் மட்டுமே. மும்மூர்த்தியின் ஸ்வரூபமாக, ஆதி குருவாக விளங்குபவர் தத்தாத்ரேயர். 

Advertisement

Advertisement

பக்தர்கள் கேட்டதைக் கொடுக்கும் ஜகன்மாதா மஹாலஷ்மி அனகாதேவியாக அவருடன் உறைகிறார். மார்கழி மாதத்தில் வரும் அஷ்டமி நாளன்று பிரதான அனகாஷ்மமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. அஷ்டமா சித்திகளையும் பிள்ளைகளாகப் பெற்ற அனகா தத்தரை வழிபடுவதே அனகாஷ்டமி விரதமாகும். 

சகல சௌபாக்கியங்களையும் அளிக்கக்கூடியது இந்த விரதம் பிரதி மாதம் ஆசிரம ஆலயத்தில் நடத்தப்படுகிறது. 

தத்தாத்ரேயர் ஜெயந்தியான நாளை தத்தாத்ரேயரை வழிபட்டு நலன்கள் பல பெறுவோம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments