சென்னை காளிகாம்பாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் இன்று தொடக்கம்
சென்னை, பாரிமுனையிலுள்ள ஸ்ரீ காளிகாம்பாள் சமேத கமடேஸ்வரர் திருக்கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் இன்று காலை தொடங்கியது.
சென்னை, பாரிமுனையிலுள்ள ஸ்ரீ காளிகாம்பாள் சமேத கமடேஸ்வரர் திருக்கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் இன்று காலை தொடங்கியது.
சென்னை, தம்புச் செட்டித் தெருவில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாகத் திகழும் ஸ்ரீ காளிகாம்பாள் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் இந்தாண்டுக்கான பிரம்மோற்ச விழா இன்று தொடங்கியுள்ளது.
குபேரன் இத்திருத்தலத்திற்கு வந்து அம்பாளை வழிபட்ட பின்னரே அவருக்கு செல்வம் அதிகரித்தது என்ற புராணங்கள் கூறுகின்றது. மேலும், மராட்டிய சிங்கம் சத்ரபதி சிவாஜி 1677-ஆம் ஆண்டு ஸ்ரீகாளிகாம்பாளை வழிபட்ட பின்னரே சிவாஜி தன்னை சத்ரபதியாக முடிசூட்டிக் கொண்டார் என்பது வரலாறு. மகாகவி சுப்பிரமணிய பாரதியார் "யாதுமாகி நின்றாய் காளி" என்று தான் எழுதிய பாடல் அன்னை ஸ்ரீ காளிகாம்பாளை மனதில் வைத்து எழுதப்பட்டதாகும்.
Advertisement
Advertisement
இவ்வளவு பெருமைகளை தன்னகத்தே கொண்ட இக்கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் நேற்று கணபதி பூஜையுடன் விழா தொடங்கப்பட்டது. 10 நாட்கள் நடைபெறும் இந்தப் பிரம்மோற்சவ விழாவில் மக்கள் அனைவரும் கலந்துகொண்டு அன்னையின் அருளைப் பெறுவோமாக.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.