நாச்சியார்கோயில் கல்கருடன் ஆலயத்தில் ஸ்ரீ மணவாள மாமுனிகள் திருநட்சத்திர புறப்பாடு
கும்பகோணம் அடுத்துள்ள நாச்சியார்கோயிலில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீனிவாச..
கும்பகோணம் அடுத்துள்ள நாச்சியார்கோயிலில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீனிவாச பெருமாள் உலக புகழ்பெற்ற கல் கருட பகவான் ஆலயத்தில் நடைபெற்று வந்த ஸ்ரீமணவாள மாமுனிகளின் திருநட்சத்திர திருவிழாவின் நிறைவு நாளான நவம்பர் 11 நேற்று, அருள்மிகு பெருமாள் - தாயார் சேஷ வாகனத்திலும், ஸ்ரீமணவாள மாமுனிகள் படிச் சட்டத்திலும் வீதி உலா நடைபெற்றது. இதில் இந்தாண்டு, பழங்கால முறையில், சுமார் 35 வருடங்களுக்குப் பின், 50 நபர்கள் தங்களின் தோள்களில் சுவாமிகளை சுமந்து வீதியுலா வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார்கள். விழா ஏற்பாட்டினை திருக்கோயில் நிர்வாகம் செய்திருந்தது.
- குடந்தை ப.சரவணன் (9443171383)
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.