சனிக்கிழமையில் ஏன் பெருமாள் கோயிலுக்குச் செல்கிறோம் தெரியுமா?
பெருமாள் கோயில்களில் மற்ற நாட்களை விட சனிக்கிழமைகளில் மட்டும் கூட்டம் நிரம்பி வழிகிறது ஏன்னென்று..
பெருமாள் கோயில்களில் மற்ற நாட்களை விட சனிக்கிழமைகளில் மட்டும் கூட்டம் நிரம்பி வழிகிறது ஏன்னென்று தெரியுமா? சனிக்கிழமைக்கும் பெருமாளுக்கும் அப்படி என்ன தொடர்பு? வாங்க பார்க்கலாம்.
சூரியனுக்கு சஞ்ஜனா, சாயா என இரண்டு மனைவிகள். சூரியனுக்கும் சஞ்ஜனாவுக்கும் பிறந்தவர்கள் யமதர்மராஜாவும், யமுனா நதியும். சாயாவுக்குப் பிறந்தவர் சனீஸ்வரன். கண்ணபிரான் யமுனையில் உள்ள காளியனை அடக்கி யமுனா நதியைத் தூய்மையாக்கியபின் அனைத்துத் தேவர்களும் யமுனையைப் போற்றத் தொடங்கினார்கள்.
கங்கையை விட யாமுனா புனிதமான நதியென அனைவரும் கொண்டாடினார்கள். அதைக் கண்ட சனீஸ்வரன் யமுனையிடம் வந்து, “சகோதரியே! உன்னை மங்களமானவள் என எல்லோரும் கொண்டாடுகிறார்கள். ஆனால் என்னை முடவன் என்றும் அமங்களமானவன் என்றும் கூறுகிறார்களே. உன்னைப் போல நானும் மங்களகரமானவனாக ஆகவேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?”என்று கேட்டார். அங்கே வந்த நாரதர், “சனீஸ்வரா! யமுனை கண்ணனின் திருவுள்ளத்தை மகிழ்வித்தாள். அதனால் மங்களகரமானவளாக இருக்கிறாள். நீயும் கண்ணனின் திருவுள்ளத்தை உகப்பித்தால் மங்களமாகி விடுவாய்!”என்று கூறினார்.
Advertisement
Advertisement
மேலும் தகவல்கள் அறிய விடியோவை பாருங்கள்..
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.