திருப்பதிக்கு கைக்குழந்தைகளோடு செல்பவர்களுக்கு மட்டும்!
திருமலை திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் இரு நாள்கள் மூத்த குடிமக்கள் மற்றும் கைக் குழந்தைகளின்..
திருமலை திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் இரு நாள்கள் மூத்த குடிமக்கள் மற்றும் கைக் குழந்தைகளின் பெற்றோர் உள்ளிட்டவர்களுக்கு சிறப்பு தரிசனத்தை வழங்கி வருகிறது.
அந்தவகையில், பிப்.19-ம் தேதி மூத்த குடிமக்கள் மற்றும் பிப். 20-ம் தேதி கைக் குழந்தைகளின் பெற்றோருக்கு சிறப்பு தரிசனம் வழங்கப்பட உள்ளது.
வரும் பிப்.19-ம் தேதி மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு தரிசனம் வழங்கப்பட உள்ளது. காலை 10 மணிக்கு ஆயிரம் பேர், மதியம் 2 மணிக்கு 2 ஆயிரம் பேர், மாலை 3 மணிக்கு ஆயிரம் பேர் என ஒரு நாளைக்கு 4 ஆயிரம் பேருக்கு தரிசனம் வழங்க உள்ளது.
Advertisement
Advertisement
அதேபோல் பிப். 20-ம் தேதி காலை 9 முதல் மதியம் 1.30 மணி வரை 0-5 வயது வரையுள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு சுபதம் வழியாக தரிசனம் வழங்கப்பட உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.