மங்கைமடம் வீரநரசிம்மர் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்!
மங்கைமடம் வீரநரசிம்மர் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண உற்சவம் குறித்து...
பூம்புகார்: திருவெண்காடு அருகே உள்ள மங்கைமடம் வீரநரசிம்மர் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
திருவெண்காடு அருகே மங்கை மடத்தில் வீர நரசிம்மர் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் பஞ்ச நரசிம்மர் கோயில்களில் ஒன்றாகும். முன்பொரு காலத்தில் திருமங்கை ஆழ்வார், இவரை வழிபட்டு நாள்தோறும் பெண்களுக்கு அன்னதானம் அளித்ததால் மங்கையர் மடம் என இவ்வூர் அழைக்கப்படுகிறது.
இந்த பெருமாளை பற்றி குலசேகர ஆழ்வார், பூதத்தாழ்வார் உள்ளிட்ட பல்வேறு ஆழ்வார்கள் பாசுரங்கள் பாடியுள்ளனர். இந்த பெருமாளை வழிபட்டால் பல்வேறு தோஷங்கள் நிவர்த்தியாகும் என புராண வரலாறுகள் கூறுகின்றன.
Advertisement
Advertisement
இக்கோயிலின் ஆண்டு பிரம்மோற்சவம் கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திங்கள்கிழமை இரவு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
இதை ஒட்டி நரசிம்மர், தாயாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினர். கோயிலின் பரம்பரை ஸ்தானிக அர்ச்சகர் பாலாஜி பட்டர் தலைமையில் கல்யாண வைதீக சடங்குகள் செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து மாங்கல்யம் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் நடந்தது. அப்போது திரளான பக்தர்கள் நரசிம்மா, நரசிம்மா என சரண முழக்கமிட்டு வழிபட்டனர். இதில் கோயில் நிர்வாக அதிகாரி முருகன், அறங்காவலர் குழுத் தலைவர் எம். என். ஆர். ரவி உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து புஷ்ப பல்லாக்கில் சுவாமி வீதி உலா காட்சி நடைபெற்றது.
The celestial wedding festival was held at the Veera Narasimhar Temple in Mangaimadam, near Thiruvenkadu.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.