பிரதம பூஜையுடன் தொடங்கிய அமர்நாத் யாத்திரை!
அமர்நாத்தில் பிரதம பூஜையை ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தொடங்கி வைத்தார்.
அமர்நாத்தில் வருடாந்திர யாத்திரை தொடங்கவுள்ள நிலையில், பிரதம பூஜை (முதல் பூஜை) ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தொடங்கிவைத்தார்.
இமயமலையில் தெற்கு காஷ்மீரில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோயிலில் ஜூலை 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடங்கவுள்ள நிலையில், துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பிரதம பூஜை எனப்படும் முதல் பூஜையை இன்று காலை தொடங்கிவைத்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
Advertisement
Advertisement
ஹர ஹர மகாதேவ்! வருடாந்திர யாத்திரையின் சடங்குரீதியான தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், ஸ்ரீ அமர்நாத் புனித குகையில் 'பிரதம பூஜை' செய்வதில் நான் மிகுந்த பாக்கியம் பெற்றுள்ளேன்.
அமர்நாத் யாத்திரை தொடங்க மூன்று நாள்களே உள்ள நிலையில், அமர்நாத் கோயில் வாரியம், ராணுவம், காவல்துறை, பாதுகாப்புப் படைகள், உள்ளூர் சமூகம், சேவை வழங்குநர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் முழுமையான ஒருங்கிணைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.
அனைவரின் அமைதி, செழிப்பு, ஆரோக்கியம், நல்வாழ்வுக்காக அமர்நாத்திடம் பிரார்த்தனை செய்தேன் என்று பதிவிட்டுள்ளார்.
யாத்ரீகர்கள் அனைவருக்கும் பாதுகாப்பான, சிரமமற்ற மற்றும் மறக்க முடியாத யாத்திரையை உறுதி செய்வதில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.
குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள், ஜம்மு-காஷ்மீர் மக்களின் விலைமதிப்பற்ற ஆதரவுடன், ஆன்மிக ரீதியில் நிறைவான பயணத்தை மேற்கொள்ளும் பக்தர்களை வரவேற்க நாங்கள் முழுமையாகத் தயாராக உள்ளோம். பாபா அமர்நாத் அனைவரையும் ஆசிர்வதிக்கட்டும் என்று அவர் கூறினார்.
Jammu and Kashmir Lieutenant Governor Manoj Sinha on Monday performed the 'pratham puja' at the holy cave shrine of Amarnath in South Kashmir, marking the ceremonial start of this year's annual yatra.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.