திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு! பிப்ரவரி மாத ஆன்லைன் டிக்கெட் தேதிகள் வெளியீடு!
திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு டிக்கெட் பற்றி..
பிப்ரவரி மாதத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் செல்வோரின் கவனத்துக்காக ஆன்லைன் முன்பதிவு அட்டவணை பற்றிய தகவல்களைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, திருப்பதி ஏழுமலையான் ஆர்ஜித சேவைக்கான டிக்கெட்டுகளின் 2026 பிப்ரவரி மாதத்துக்கான ஒதுக்கீடு நவ. 18-ஆம் தேதி காலை 10.00 மணிக்கு புக்கிங் தொடங்குகிறது.
Advertisement
Advertisement
அதேபோன்று கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், மற்றும் சகஸ்ர தீப அலங்கார சேவை டிக்கெட் நவ. 21-ஆம் தேதி மாலை 3.00 மணிக்கு ஆன்லைன் மூலம் புக்கிங் தொடங்குகின்றது.
நவ. 23-ஆம் தேதி காலை 10.00 மணிக்கு அங்கப்பிரதட்சிணம் டோக்கன் பக்தர்கள் புக் செய்துகொள்ளலாம்.
மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நவ. 23-ஆம் தேதி பிற்பகல் 3.00 மணிக்கு ஆன்லைன் புக்கிங் தொடங்குகிறது.
பிப்ரவரி மாதத்தில் ரூ. 300 தரிசன கட்டணத்துடன் சுவாமி தரிசனம் செய்வோர் நவ. 24-ஆம் தேதி காலை 10.00 மணிக்கும், அன்றைய தினம் அறை ஒதுக்கீடு மாலை 3.00 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படும்.
திருச்சானூர் பத்மாவதி தாயாரைத் தரிசிக்கும் ரூ. 200-க்கான டிக்கெட் நவ. 24-ம் தேதி காலை 10.00 மணிக்கு தொடங்குகின்றது.
மேலும், டிசம்பர் மாதத்தில் திருமலையில் உள்ள இதர கோயில்களின் சேவைகளும், சீனிவாச திவ்ய அனுக்கிரக விஷேச ஹோமம் உள்ளிட்ட சேவைகளின் ஆன்லைன் புக்கிங் நவ.. 25-ஆம் தேதி காலை 10.00-க்கு தொடங்குகிறது.
மேற்கண்ட டிக்கெட்டுகள் மற்றும் வாடகை அறைகள் முன்பதிவு செய்ய விரும்பும் பக்தர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள https://ttdevasthanams.ap.gov.in/home/dashboardஎன்ற தேவஸ்தான இணையதளம் மூலம் ஆர்ஜித சேவை மற்றும் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம் எனத் திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.