FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

60 ஆண்டுகளுக்குப் பிறகு... லிடங்கேஸ்வர சுவாமி கோயிலில் குடமுழுக்கு!

லிடங்கேஸ்வர சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழா பற்றி..

7 செப்டம்பர் 2026, 12:59 pm IST
குடமுழுக்கு - video crop
பகிர்:

ஆயிரம் ஆண்டுகள் பழமையான லிடங்கேஸ்வர சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழா 60 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று விமரிசையாக நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே கருப்பூர் கிராமத்தில் அருள்மிகு சுகந்தகுந்தாளம்பிகை உடனுறை விஜய லிடங்கேஸ்வர சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தில் குடமுழுக்கு கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது.

இதனையடுத்து கோயில் மிகவும் சிதிலமடைந்து காணப்பட்ட நிலையில் கிராம மக்கள் கோயிலுக்குக் குடமுழுக்கு நடத்த முடிவு செய்தனர். அதனைதொடர்ந்து பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கோயில் புனரமைக்கும் பணிகள் கடந்த சில வருடங்களாக நடைபெற்று வந்தது. பணிகள் முழுமையாக நிறைவு பெற்ற நிலையில் கடந்த 5 ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

Advertisement

Advertisement

இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று கடம் புறப்பாடு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மேளள தாளங்கள் முழங்க - வான வேடிக்கையுடன் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்கக் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அதனைதொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இதில் சுற்றுவட்டார பத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments