பிரம்மோற்சவம்... திருப்பதியில் தேரோட்டம் கோலாகலம்!
திருப்பதியில் விமரிசையாக நடைபெற்ற தேரோட்டம் திருவிழா...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழாவின் எட்டாம் நாளான இன்று தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் மலையப்பர் சுவாமி 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
விழாவின் சிகர நிகழ்வாக, ஐந்தாவது நாளில் நடைபெற்ற கருட சேவையில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். ஆறாம் நாளில் தங்கத் தேரோட்டம், கஜ வாகன சேவை நடைபெற்றது. ஏழாம் நாளில் சூரிய சந்திர பிரபை வாகன வீதிஉலா நடைபெற்றது.
Advertisement
Advertisement
இந்த நிலையில் விழாவின் எட்டாம் நாளான இன்று காலை ரதோற்சவம் (பெரிய தேரோட்டம்) வெகு விமரிசையாக நடைபெற்றது. 43 அடி உயரம், 47 டன் எடை கொண்ட பிரமாண்ட மரத்தால் ஆன தேரில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்குத் தரிசனம் அளித்தார்.
இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் இழுத்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.