FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நூல் அரங்கம்

கைவல்ய நவநீதம்

கைவல்ய நவநீதம் - ஸ்ரீலஸ்ரீ தாண்டவராய சுவாமிகள்; பக். 528; ரூ.300; கோவிலூர் ஆதீனம், கோவிலூர்-)04565 - 238783. 

Updated On : 26 ஏப்ரல் 2021, 12:34 pm IST
பகிர்:

கைவல்ய நவநீதம் - ஸ்ரீலஸ்ரீ தாண்டவராய சுவாமிகள்; பக். 528; ரூ.300; கோவிலூர் ஆதீனம், கோவிலூர்-)04565 - 238783.
 வேதாந்த தத்துவங்களை ஆழமாகவும் எளிமையாகவும் விளக்கும் நூல் "கைவல்ய நவநீதம்' . 288 செய்யுள்களில் வேதாந்த கருத்துகளை முழுமையாக விளக்கும் இந்நூலை ஸ்ரீலஸ்ரீ தாண்டவராய சுவாமிகள் இயற்றியுள்ளார். இந்நூலுக்கு அறிஞர்கள் பலர் உரை எழுதியுள்ளனர். இந்த நூலில் கோவிலூர் பொன்னம்பல ஞான தேசிக சுவாமிகள் இயற்றியுள்ள "தத்துவார்த்த தீபம்' என்னும் உரை இடம் பெற்றுள்ளது.
 இந்நூல் "தத்துவ விளக்கப்படலம்', "சந்தேகம் தெளிதல் படலம்' என இரண்டு படலமாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தத்துவவிளக்கப் படலத்தில் 148 பிரசங்கத் தொகைகளும், சந்தேகம் தெளிதல் படலத்தில் 161 பிரசங்கத் தொகைகளும் இடம் பெற்றுள்ளன.
 தத்துவ விளக்கப் படலத்தில் "ஏகநாயகன் என்பதற்குப் பொருள்', " உப லட்சணம்' , "சாதன சதுஷ்டயம்', "பிரம்மத்தின் இயல்பு', "சீவன் இயல்பு' போன்ற முக்கிய பகுதிகளுக்கான விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
 சந்தேகம் தெளிதல் படலத்தில் "சமுசய பேதம்'," மலின வாசனை', "உலக வாசனை', "இருவகை மனநாசம்', "திடஞானம் - அதிடஞானம்', "அத்வைதாநந்தம்' போன்ற பல பகுதிகள் சிறப்பாகவும் தெளிவாகவும் விளக்கப்பட்டுள்ளன.
 செய்யுளைக் குறிப்பிட்டு, அதற்கான விளக்கத்தைத் தருவது என்கிற அளவில் நின்றுவிடாமல் தனது விளக்கத்திற்கான தரவுகளாக பற்பல நூற்களிலிருந்தும் - குறிப்பாக "வாசிட்டம்', "வேதாந்த சூடாமணி' - கருத்துகளை மேற்கோளாகக் குறிப்பிட்டுள்ளது எளிதாகப் பொருள் புரிந்து கொள்ள உதவுகிறது.
 "கைவல்ய நவநீதம்' என்கிற தத்துவார்த்த நூலுக்கு அதன் "கனம்' குறைந்துவிடாமல் எளிய முறையில் எழுதப்பட்ட உரை எல்லாரும் படித்துப் பயன்பெறத் தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments