சானியாவுக்கு அறுவை சிகிச்சை
ஹைதராபாத், அக்.8: இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு ஹைதாராபாதில் சனிக்கிழமை அறுவை சிகிச்சை நடந்தது. இதனால் அடுத்த சில வாரங்களுக்கு அவர் டென்னிஸ் விளையாடமாட்டார். இடது கால் மூட்டில் ஏற்பட்ட
ஹைதராபாத், அக்.8: இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு ஹைதாராபாதில் சனிக்கிழமை அறுவை சிகிச்சை நடந்தது. இதனால் அடுத்த சில வாரங்களுக்கு அவர் டென்னிஸ் விளையாடமாட்டார்.
இடது கால் மூட்டில் ஏற்பட்ட காயத்துக்காக பிரபல எலும்பு மருத்துவ நிபுணரால் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என சானியாவின் தந்தை இம்ரான் தெரிவித்தார். கடந்த மாதம் நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின்போது அவரின் இடது கால் மூட்டில் உள்ள சவ்வு கிழிந்தது. இதையடுத்து இப்போது அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்போது அவரது கணவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருமான ஷோயிப் மாலிக்கும் உடனிருந்தார். இந்த காயத்துக்காக ஊசி மூலம் அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.