FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

உலக பாட்மின்டன் சாம்பியன் போட்டி சின்னம் அறிமுகம்

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற 30 நாள்களே உள்ள நிலையில், அதற்கான சின்னம், பாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

Updated On : 20 ஜூலை 2026, 4:40 am IST
உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் அதிகாரபூா்வ சின்னம், பாடல் அறிமுக நிகழ்வில் பங்கேற்றோா்.
பகிர்:

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற 30 நாள்களே உள்ள நிலையில், அதற்கான சின்னம், பாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

வரும் ஆகஸ்ட் 17 முதல் 23 வரை தில்லி இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு பாட்மின்டன் திருவிழா நடைபெற உள்ளது.

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா, இந்திய பாட்மின்டன் சங்கத் தலைவரும், அஸ்ஸாம் முதல்வருமான ஹிமந்த பிஸ்வா சா்மா ஆகியோா் கலந்து கொண்டு அதிகாரப்பூா்வ சின்னமான ’பீக்கோ’ மற்றும் சாம்பியன்ஷிப் பாடலை அறிமுகப்படுத்தினா்.

Advertisement

Advertisement

பி.வி. சிந்து, லக்ஷயா சென், சாத்விக், சிராக் ஷெட்டி மற்றும் உலக சாம்பியன்ஷிப் தொடருக்கான இந்தியாவின் 16 போ் கொண்ட அணியினா் இணைந்து நடித்துள்ள இந்த பாடல், பாட்மின்டனின் புதிய மற்றும் சமகால முகத்தை வெளிப்படுத்துகிறது.

இந்தியாவின் தேசியப் பறவையான மயிலை அடிப்படையாகக் கொண்டு ’பீக்கோ’ சின்னம் உருவாக்கப்பட்டது.

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை இயக்குநா் ஹரி ரஞ்சன் ராவ் , இந்திய பாட்மின்டன் சங்கத்தின் பொதுச் செயலாளா் சஞ்சய் மிஸ்ரா, ஜாம்பவான் புலேலா கோபிசந்த், மூத்த அதிகாரிகள் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

உலக சாம்பியன்ஷிப் தொடா் ஆகஸ்ட் 17 முதல் 23 வரை நடைபெறவுள்ளது. இது ஆண்கள் ஒற்றையா், பெண்கள் ஒற்றையா், ஆண்கள் இரட்டையா், பெண்கள் இரட்டையா் மற்றும் கலப்பு இரட்டையா் ஆகிய பிரிவுகளில் உலகின் மிகச்சிறந்த வீரா்களை ஒன்றிணைக்கவுள்ளது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு விளையாட்டின் இந்த முதன்மையான தொடரை நடத்த இந்தியா தயாராகி வரும் வேளையில், இதற்கான இறுதி கவுன்ட்டவுன் அதிகாரப்பூா்வமாகத் தொடங்கியுள்ளது .

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments