FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விளையாட்டு

கார்ல்செனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா! ஒரே போட்டியில் 2-ஆவது முறை

Updated On : 4 ஜூன் 2026, 5:15 am IST
பகிர்:

நார்வே செஸ் போட்டியின் 8}ஆவது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா, போட்டியின் நடப்பு சாம்பியனும், உலகின் நம்பர் 1 வீரருமான நார்வேயின் மேக்னஸ் கார்ல்செனை வீழ்த்தினார்.

டபுள் ரவுண்ட் ராபின் முறையிலான இந்தப் போட்டியில், ஓபன் பிரிவு முதல் சந்திப்பில் கார்ல்செனை கிளாசிக் கேமில் வென்ற பிரக்ஞானந்தா, இந்த ரிவர்ஸ் ஆட்டத்திலும் அவரை அதேபோல் வெற்றி கண்டார்.

இந்த வெற்றியின் மூலமாக 3}ஆவது இடத்துக்கு முன்னேறியிருக்கும் பிரக்ஞானந்தா, சாம்பியனாவதற்கான நம்பிக்கையுடன் இருக்கிறார். போட்டியில் இன்னும் 2 சுற்றுகள் எஞ்சியுள்ளன.

Advertisement

Advertisement

இதனிடையே, 8}ஆவது சுற்றின் இதர ஆட்டங்களில், நடப்பு உலக சாம்பியனான டி.குகேஷ் கிளாசிக் கேமிலேயே, பிரான்ஸின் அலிரெஸô ஃபிரெüஸ்ஜாவிடம் தோற்க, அமெரிக்காவின் வெஸ்லி சோ டை பிரேக்கரில் ஜெர்மனியின் வின்சென்ட் கீமரை வென்றார்.

இத்துடன் 3 கிளாசிக்கல் கேம் தோல்வியை சந்தித்த குகேஷ், நார்வே செஸ் பட்டம் வெல்லும் பந்தயத்திலிருந்து வெளியேறிவிட்டார். கார்ல்சென் பட்டத்தை தக்கவைக்க, நூலிழையை விட மெல்லிய வாய்ப்பே உள்ளது.

8 சுற்றுகள் முடிவில் வெஸ்லி (14), ஃபிரெüஸ்ஜா (13), பிரக்ஞானந்தா (12) ஆகியோர் முறையே முதல் 3 நிலைகளில் உள்ளனர். கீமர் (10), கார்ல்சென் (9), குகேஷ் (8) ஆகியோர் முறையே கடைசி 3 நிலைகளில் இருக்கின்றனர்.

திவ்யா தோல்வி: மகளிர் பிரிவில், நடப்பு மகளிர் உலகக் கோப்பை சாம்பியனான இந்தியாவின் திவ்யா தேஷ்முக், கிளாசிக் கேமிலேயே கஜகஸ்தானின் பிபிசரா அசெüபயேவாவிடம் தோல்வி காண, சீனாவின் ஜு ஜினெரும் அதே கேமிலேயே சக சீனரான ஜு வென்ஜுனிடம் தோல்வியுற்றார்.

இந்தியாவின் கோனெரு ஹம்பி, நார்வே செஸ் நடப்பு சாம்பியனான உக்ரைனின் அனா முஸிஷுக்குடன் டை பிரேக்கரிலும் டிரா செய்தார்.

புள்ளிகள் பட்டியலில் தற்போது, அசெüபயேவா (15.5) தனி முன்னிலையுடன் ஆதிக்கம் செலுத்த, முஸிஷுக் (10.5) இரண்டாம் நிலையில் உள்ளார்.

திவ்யா, ஜினெர் ஆகியோர் தலா 10 புள்ளிகளுடன் முறையே 3}ஆம் நிலையைப் பகிர்ந்துகொண்டுள்ளனர். வென்ஜுன் (9), ஹம்பி (8) முறையே 4 மற்றும் 5}ஆம் நிலைகளில் இருக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments