நார்வே செஸ்: 2-ஆவது முறையாக கார்ல்செனை வீழ்த்தி வரலாறு படைத்த பிரக்ஞானந்தா!
நார்வே செஸ்ஸில் இரண்டாவது முறையாக கார்ல்செனை வீழ்த்திய பிரக்ஞானந்தா குறித்து...
தமிழக வீரர் பிரக்ஞானந்தா நார்வே செஸ் போட்டியில் இரண்டாவது முறையாக உலகின் முன்னணி வீரரான கார்ல்செனை வீழ்த்தி அசத்தியுள்ளார். முன்னதாக தொடரின் 3-ஆவது சுற்றில் கார்ல்செனை வீழ்த்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
நார்வே செஸ் போட்டி மே 25 முதல் ஜூன் 5ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றன. தற்போது எட்டு சுற்றுகள் முடிவடைந்துள்ளன. மீதம் 2 சுற்றுகள் இருக்கின்றன.
நார்வே செஸ் 8ஆவது சுற்றில் கார்ல்சென் வெள்ளை நிற காய்களுடனும் பிரக்ஞானந்தா கறுப்பு நிற காய்களுடனும் விளையாடினார்கள்.
Advertisement
Advertisement
இந்தப் போட்டியில் 48ஆவது நகர்த்தலில் கார்ல்சென் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். ஒரே வாரத்தில் கார்ல்செனை இரண்டு முறை வீழ்த்தி பிரக்ஞானந்தா வரலாறு படைத்துள்ளார்.
முன்னதாக, 2024ல் பிரக்ஞானந்தா ஒருமுறை கார்ல்செனை வீழ்த்தியிருந்தார். விஸ்வநாதன் ஆனந்த் 2007ல் இரண்டு முறை இதே கிளாசிக்கல் கேமில் கார்ல்செனை வீழ்த்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்தத் தொடரில் கார்ல்சென் நான்காவது முறையாக தோல்வியுற்று அதிர்ச்சியளித்துள்ளார். 8 சுற்றுகள் முடிவடைந்த நிலையில், ஆடவர் பிரிவில் வெஸ்லி ஸோ, மகளிர் பிரிவில் பிபிசரா முதலிடம் வகிக்கிறார்கள்.
Norway Chess: Praggnanandhaa beats Carlsen again; Gukesh's title hopes end
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.