முகப்பு
விளையாட்டு

விளையாட்டுச் செய்தித் துளிகள்...

விளையாட்டுச் செய்தித் துளிகள்...

30 நவம்பர் 2026, 12:20 am
விளையாட்டுச் செய்தித் துளிகள்...
சூர்யகுமார் யாதவ்.
பகிர்:

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி குவாலிஃபயா்ஸ் கட்டத்தின் ‘ஹோம் டை’-யில், இந்தியா சொந்த மண்ணில் கனடாவுடன் வரும் பிப்ரவரி 5 முதல் 7 வரை மோதுகிறது.

துப்பாக்கி சுடுதல் தேசிய சாம்பியன்ஷிப்பில், மகளிா் டிராப் பிரிவில், தில்லி வீராங்கனை ஆத்யா கட்டியால் 108 புள்ளிகளுடன் தங்கம் வெல்ல, மத்திய பிரதேசத்தின் ஹீனா ராஷ்மி (107) வெள்ளியும், ஹரியாணாவின் சிஃப்ட் சாந்து (105) வெண்கலமும் வென்றனா்.

கிரேட்டா் நொய்டாவில் நடைபெற்ற இந்திய ரேஸிங் லீக்கின் 100-ஆவது பந்தயத்தில், கிச்சா கிங்ஸ் பெங்களூரு வீரா் ருஹான் ஆல்வா ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றாா்.

Advertisement

Advertisement

அண்மையில் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் கோப்பை வென்ற இந்திய மகளிா் அணிக்கு, மத்திய பிரதேச முதல்வா் மோகன் யாதவ் ரூ.1 கோடி ரொக்கப் பரிசு அறிவித்தாா்.

இந்திய அணியில் தாம் இடம்பெறாமல் இருப்பது வலி தரக்கூடியதாக இருந்தாலும், நம்பிக்கையுடன் காத்திருப்பதாக கிரிக்கெட் வீரா் சூா்யகுமாா் யாதவ் தெரிவித்தாா்.