FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

நியூசி., இங்கிலாந்து அணிகளுக்கு அபராதம்..! டபிள்யூடிசியில் புள்ளிகள் இழப்பு!

நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு மெதுவாக பந்துவீசியதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 3 டிசம்பர் 2024, 5:43 pm IST
நியூசி., இங்கிலாந்து அணி - கோப்புப் படம்
பகிர்:

நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு மெதுவாக பந்துவீசியதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 348 ரன்களுக்கு ஆட்டமிழக்க இங்கிலாந்து 499 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் நியூசி. 254 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Advertisement

Advertisement

இந்தப் போட்டியில் இரு அணிகளும் மெதுவாக பந்துவீசியதாக 15% போட்டி ஊதியத்திலிருந்து அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் 3 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளன போட்டியின் நடுவர் டேவிட் பூன் தெரிவித்துள்ளார்.

இரு அணிகள் இந்த அபராதத்தை ஏற்றுக்கொண்டுள்ளன. புள்ளிகள் கிறைப்பினால் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

எத்தனை ஓவர்கள் தாமதமாக வீசப்படுகிறதோ அத்தனை புள்ளிகள் குறைக்கப்படுவது ஐசிசியின் விதி.

இங்கிலாந்து அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இருந்து ஏற்கனவே வெளியேறிவிட்டது. ஆனால், நியூசிலாந்து அணிக்கு இன்னமும் வாய்ப்பிருக்கிறது. அதனால் இந்த அபராதம் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமென கணிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments