இஷான் கிஷன் படம் | ஐபிஎல்
கிரிக்கெட்

இஷான் கிஷனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்த யுவராஜ் சிங்!

இந்திய அணி வீரர் இஷான் கிஷனுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

DIN

இந்திய அணியின் இஷான் கிஷனுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான இஷான் கிஷன் இன்று அவரது 26-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில், இந்திய அணியின் சிக்ஸர் மன்னன் யுவராஜ் சிங் அவருக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக யுவராஜ் சிங் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: பிறந்தநாள் வாழ்த்துகள். இந்த சிறப்பான நாளை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். உங்களை இந்திய அணியில் விரைவில் பார்க்க ஆவலோடு காத்திருக்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட பிசிசிஐயின் மத்திய ஒப்பந்தத்தில் இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரின் பெயர் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருணாச்சலா கலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

விஜய் என் தம்பி! அவரைக் கண்டிக்க எனக்கு உரிமையுண்டு: சீமான் விமர்சனம்

இரணியலில் கோழி பண்ணையை அகற்றக் கோரி பாஜக ஆா்ப்பாட்டம்

செல்ஃபி கேர்ள்... ஜான்வி கபூர்!

ராணுவ முகாமில் இருந்து வெளியேறினார் நேபாள முன்னாள் பிரதமர்!

SCROLL FOR NEXT