வாஷிங்டன் சுந்தரை ஏலத்தில் எடுத்த குஜராத் டைட்டன்ஸ்!
ஐபிஎல் மெகா ஏலத்தில் வாஷிங்டன் சுந்தர் குஜராத் டைட்டன்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் மெகா ஏலத்தில் வாஷிங்டன் சுந்தர் குஜராத் டைட்டன்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் மெகா ஏலம் சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நேற்று (நவம்பர் 24) தொடங்கியது. இந்த ஏலத்தில் இந்திய வீரர் ரிஷப் பந்த் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகபட்சமாக ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். அவரை லக்னௌ அணி ஏலத்தில் எடுத்தது.
இதையும் படிக்க: முதல் டெஸ்ட்: ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
Advertisement
Advertisement
இந்த நிலையில், இன்று (நவம்பர் 25) இரண்டாம் நாள் ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த ஏலத்தில் இந்திய அணியின் ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தரை குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ.3.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
வாஷிங்டன் சுந்தர் தற்போது பார்டர் - கவாஸ்கர் தொடரில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.