மார்கோ யான்சென் படம் | AP
கிரிக்கெட்

பந்துவீச்சில் அசத்திய மார்கோ யான்சென், 5 பேர் டக் அவுட்; 42 ரன்களில் சுருண்ட இலங்கை!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

DIN

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இலங்கை அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் நேற்று (நவம்பர் 27) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் விளையாடியது.

தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் டெம்பா பவுமா 70 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, கேசவ் மகாராஜ் அதிகபட்சமாக 24 ரன்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் அஷிதா ஃபெர்னாண்டோ மற்றும் லகிரு குமாரா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். விஸ்வா ஃபெர்னாண்டோ மற்றும் பிரபாத் ஜெயசூர்யா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

42 ரன்களில் ஆட்டமிழப்பு

தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடியது. தென்னாப்பிரிக்க அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை அணி 42 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் 5 வீரர்கள் (தினேஷ் சண்டிமால், குசல் மெண்டிஸ், பிரபாத் ஜெயசூர்யா, விஸ்வா ஃபெர்னாண்டோ, அஷிதா ஃபெர்னாண்டோ) டக் அவுட் ஆகினர். அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் 13 ரன்கள் எடுத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி ஆட்டமிழந்த மிகவும் குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும்.

தென்னாப்பிரிக்கா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய மார்கோ யான்சென் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஜெரால்டு கோட்ஸீ 2 விக்கெட்டுகளையும், ககிசோ ரபாடா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

தென்னாப்பிரிக்க அணி 150-க்கும் அதிகமான ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ்த் தீ பரவட்டும்! பராசக்தி படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் ஓடிடியில் வெளியீடு!

ராகுலின் உரைக்கு பாஜக பதிலளிக்க முடியுமா? - கே.சி. வேணுகோபால் கேள்வி

#savafg | பற்றிக் கொண்ட டி20 உலகக் கோப்பை தீ: விருந்தளித்த SA v AFG ஆட்டம் | T20 World Cup | #t20wc

டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்ட 9,801 பேருக்கு நாளை பணி நியமன ஆணை: முதல்வர் வழங்குகிறார்!

அமெரிக்க காவல் வாகனம் மோதி பலியான இந்திய பெண் குடும்பத்துக்கு ரூ.265 கோடி இழப்பீடு

SCROLL FOR NEXT