முகப்பு
கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: பாக். 366 ரன்களுக்கு ஆல்-அவுட்!

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்டில் பாகிஸ்தான் அணி 366 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

Updated On : 16 அக்டோபர் 2024, 2:56 pm IST
இங்கிலாந்து அணியினர் - படம் | ஏபி
பகிர்:

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்டில் பாகிஸ்தான் அணி 366 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி பாகிஸ்தானின் முல்தானில் நடைபெற்று வருகிறது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத், பேட்டிங்கை தோ்வு செய்தார்.

Advertisement

Advertisement

இதையும் படிக்க..: சென்னையில் வெள்ளநீர் வடியக் காரணம்? - மு.க. ஸ்டாலின் பேட்டி

அதன் படி தனது முதல் இன்னிங்ஸில் அப்துல்லா ஷஃபிக் 7 ரன்களுக்கு வெளியேற, உடன் வந்த சயிம் அயுப் நிதானமாக ரன்கள் சோ்த்தாா். மறுபுறம், கேப்டன் ஷான் மசூத் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

4-ஆவது பேட்டரான கம்ரான் குலாம், அயூபுடன் இணைந்து ஸ்கோரை உயா்த்த, அந்த ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 149 ரன்கள் சோ்த்தது. அயுப் 7 பவுண்டரிகளுடன் 77 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். அதிகபட்சமாக கம்ரான் குலாம் 11 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 118 ரன்கள் விளாசினார்.

முதல் நாள் ஆட்டநேரம் முடிவில் முகமது ரிஸ்வான் 37 ரன்களுடனும், சல்மான் அகா 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இதையும் படிக்க..:சென்னையில் இருந்து 320 கி.மீ. தொலைவில் காற்றழுத்த மண்டலம்

பின்னர் 2-வது நாள் ஆட்டம் இன்று (அக்.16) தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சில நிமிடத்திலேயே முகமது ரிஸ்வான் 41 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து அமிர் ஜமால் 37 ரன்களிலும், நோமன் அலி 32 ரன்களிலும் சாஜித் கான் 2 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர்.

123.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் அணி 366 ரன்கள் எடுத்தது.

அசத்தலாக பந்துவீசிய இங்கிலாந்து அணி தரப்பில் ஜாக் லீச் 4 விக்கெட்டுகளும், பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டுகளும், மேத்யூ பாட்ஸ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் எடுத்துள்ளது.

இதையும் படிக்க..:ஜம்மு - காஷ்மீர் முதல்வராக பதவியேற்றார் ஒமர் அப்துல்லா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments